செவ்வாய் கோளின் வளிமண்டலத்துடன் சூரியக் காற்று எப்படி செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்ய வடிவமைக்கப்பட்ட நாசாவின் இரட்டை செயற்கைகோள் திட்டமான ESCAPADE விண்வெளிப் பயணத்தில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. காரணம்? விண்வெளி காலநிலையை கடந்து வந்த சக்திவாய்ந்த சூரிய புயல். இந்த புயலின் தாக்கம் காரணமாக, சூழ்நிலை நிலையானால் மட்டுமே ஏவுதல் பணியை மேற்கொள்ள முடியும் என நாசாவின் மிஷன் கட்டுப்பாட்டு குழு தீர்மானித்தது.
இதனிடையே, பல்கேரியாவில் வாழ்ந்த தீர்க்கதரிசி பாபா வங்காவின் கணிப்பு இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது.. அவர் பல்வேறு உலக நிகழ்வுகளையும் சூரிய தொடர்பான அதிதீவிர மாற்றங்களையும் முன்னறிவித்ததாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். சூரிய புயல் ஏற்பட்ட நேரமும், நாசாவின் ஏவுதல் தாமதமும் ஒரே நேரத்தில் நடந்ததால் “அவரது மேலும் ஒரு கணிப்பு நடந்துவிட்டதா?” என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.
பாபா வங்கா பல ஆண்டுகளாக மிகச் சரியான கணிப்புகள் கொடுத்தவராக அறியப்படுகிறார். அவர் ‘பால்கனின் நோஸ்ட்ரடாமஸ்’ என்றும் அழைக்கப்படுகிறார்..
பல்கேரிய நாட்டு இந்த தீர்க்கதரிசி1996ஆம் ஆண்டு மறைந்துவிட்டாலும், அவரது தீர்க்கதரிசனங்கள் அடிக்கடி செய்திகளில் வெளிவருகின்றன. குறிப்பாக ஒவ்வொரு புதிய ஆண்டும் வரும்போது, பாபா வாங்ஃகாவின் கணிப்புகள் சமூக வலைதளங்களில் வைரலாகத் தொடங்குகின்றன.
அரசியல்துறை முதல் உலக நிகழ்வுகள் வரை, அவர் பல முக்கிய விஷயங்களையும் நெருக்கமாக முன்கூட்டியே கூறியதாக அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர் —
பிரின்சஸ் டயானாவின் மரணம், கோவிட்-19 தொற்றுநோய் போன்றவற்றையும் அவர் முன்னதாகக் கணித்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு சூரிய புயல் ஏற்படும் என்று பாபா வங்கா கணித்திருந்தார்..
அந்த வகையில் தற்போது “கேன்னிபல் புயல்” (Cannibal Storm) என்று அழைக்கப்படும் முதல் சூரிய புயல், ஏற்கனவே வானொலி சிக்னல்களை பாதித்து பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில், 2012 முதல் BGS (British Geological Survey) இதை கண்காணிக்கத் தொடங்கியதிலிருந்து, இந்த புயல் தான் நில மட்டத்தில் பதிவான மிக வலுவான மின்சார களத்தை உருவாக்கியுள்ளது.
அடுத்த கட்டத்தில் வரும் இந்த சூரிய புயல், நாம் தினமும் நம்பிக்கையாக பயன்படுத்தும் பல வசதிகளை பாதிக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர் —
உதாரணமாக: தொடர்பு வலைப்பின்னல்கள் (communication networks), GPS சேவைகள், விண்வெளியில் செயற்கைக்கோள்கள் பின்பற்றும் பாதைகள் இவை அனைத்திலும் இடையூறுகள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
பாபா வங்காவின் மற்றொரு சர்ச்சைக்குரிய கணிப்பு ஐரோப்பாவின் எதிர்காலத்தைப் பற்றியது. அவர் வரும் ஆண்டுகளில் ஐரோப்பாவில் பெரும் மாற்றங்கள் ஏற்படும் என்று கணித்துள்ளார்.. குறிப்பாக, அடுத்த 19 ஆண்டுகளில் ஐரோப்பாவின் நிலை முழுமையாக மாறி, பெரும் அளவிலான மக்கள் தொகை இழப்பு ஏற்படும் என்றும் கணித்ததாக கூறப்படுகிறது. ஐரோப்பாவே வெறிச்சோடி காணப்படும் என்றும் அவர் கணித்துள்ளாராம்..
மேலும், ம்ற்றொரு கணிப்பில் அடுத்த 18 ஆண்டுகளில் ரோம் நகரத்தில் ஒரு களீபா (Caliph) ஆட்சி செய்வார் என்றும் அவர் கூறியதாகக் கூறப்படுகிறது. உலகின் பெரிய கத்தோலிக்க மையம் ஆன வாடிகன் நகரம் ரோம் நகரத்திற்குள் உள்ளதால், இந்த கணிப்பு பெரும் விவாதத்தையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Read More : AI-ஐ பயன்படுத்தினால் சிந்திக்கும் திறன் மோசமாகுமா? அல்லது மேம்படுமா? இதுதான் உண்மை!



