காலையில் எழுந்தவுடன் காபி குடிப்பது நல்லதா?.. சிறந்த நேரம் எது ?…நிபுணர்களின் விளக்கம்….!

பெரும்பாலானோர் காலையில் எழுந்தவுடன் காபி குடிக்கும் பழக்கத்தை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் இது உடலுக்கு நன்மை தரக்கூடியதா, இல்லையா என்பதை பற்றி பார்க்கலாம்.

தினமும் காலை ஒரு கப் டீ அல்லது காபி உடனே தங்கள் நாளை தொடங்குகின்றனர். தினமும் காபி அருந்துவதில் எந்தத் தீங்கும் இல்லை, ஆனால் அளவுக்கு அதிகமாக காபி குடிப்பதால் பல தீங்கு விளைவிக்கும்.

காபி குடிப்பதால் பல நன்மைகள் உள்ளன, காபியில் உள்ள காஃபின் ஆற்றல் அளவை அதிகரிக்கவும், விழிப்புணர்வை அதிகரிக்கவும், அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தவும், உடல் செயல்பாடுகளின் போது செயல்திறனை மேம்படுத்தவும் உதவுகிறது.

ஆனால் காபி குடிக்க சிறந்த நேரம் எது தெரியுமா? காலை எழுந்த பிறகு ஒரு மணிநேரம் அல்லது இரண்டு மணி நேரத்திற்கு பிறகு காபி குடிப்பது நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். காலை எழுந்த உடன் ஒரு டம்ளர் தண்னீர் குடித்துவிட்டு, அதன்பின்னர் 2 மணி நேரத்திற்கு பின்னர் தான் காபி குடிக்க வேண்டும்.முடிந்த அளவு காலை உணவு சாப்பிட்ட பிறகு காபி குடிக்கலாம்.இதன் மூலம் வெறும் வயிற்றில் காபி குடிப்பதால் சில சமயங்களில் ஏற்படும் அசௌகரியத்தையும் தடுக்கலாம்.

பொதுவாகவே காஃபின் வயிற்றில் உள்ள அமிலம் மற்றும் பித்த உற்பத்தியை அதிகரிக்கும் பண்புடையது , இது அமில ரிஃப்ளக்ஸ் அறிகுறிகளை அதிகரிக்கச் செய்யும். இது பெருங்குடல் இயக்கத்தை அதிகரிக்கலாம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றன.

மதியம் வேளையில் காபி குடிப்பதை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் இது உங்கள் தூக்கச் சுழற்சியைப் பாதிக்கும்.ஒழுங்கற்ற தூக்கமுறையால் உடலின் ஆற்றலில் மற்றம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Maha

Next Post

நாடு முழுவதும் ஏப்ரல் -16 முதல் 30-ம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும் இது கட்டாயம்...!

Sun Apr 14 , 2024
நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மழைநீர் சேமிப்பு மற்றும் நீர்நிலை பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வு குறித்த நிகழ்வுகள் நடத்திட வேண்டும். தமிழகத்தில் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் கோடை வெப்பம் அதிகமாக காணப்படும் . இந்த ஆண்டு பருவ நிலை மாற்றத்தினால் கோடை வெப்பத்தின் தாக்கம் வெகுவாக அதிகரித்துக் கொண்டே வருகின்றது . பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளில் பணிபுரியும் […]

You May Like