இரவில் கேட்கும் மர்ம சத்தம்..!! மீன்களின் உடலுறவால் தூங்க முடியாமல் தவித்த மக்கள்..!! ஆய்வில் அதிர்ச்சி..!!

அமெரிக்காவின் புளோரிடாவின் தம்பா விரிகுடா பகுதியில் வசிப்போருக்கு வினோதமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்கு சில காலமாகவே இரவு நேரங்களில் ஏதோ ஒரு மர்மமான சத்தம் கேட்டுள்ளது. இரவு நேரங்களில் மட்டும் கேட்கும் இந்த ஹை பிட்ச் சத்தத்தால், சுவர்களை எல்லாம் அதிர்ந்ததாம். இதனால் குழந்தைகளால் தூங்கக் கூட முடியாத நிலை உருவானதாம். முதலில் இந்த சத்தம் என்ன சத்தம் என்றே பலருக்கும் தெரியாமல் இருந்தது. சிலர் அருகே உள்ள ராணுவ தளத்தில் சீக்ரெட் ஆயுதங்களைச் சோதனை செய்வதாகவும் அந்தச் சத்தம் தான் இது எனக் கூறியுள்ளனர். இன்னும் சிலர் இரவு நேரங்களில் விசிட் அடிக்கும் ஏலியன்களின் சத்தமே இது எனக் கூறியுள்ளனர்.

பல நாட்கள் இதேபோல தொடர்ந்து சத்தம் கேட்டுள்ளது. குறிப்பாகக் குளிர் காலங்களில் எல்லா நாட்களும் இரவு நேரத்தில் சத்தம் கேட்டதால் அது என்ன சத்தம் என்பதை அங்குள்ள மக்களால் கண்டறிய முடியவில்லை. இதனால், ஆய்வாளர்களை உள்ளூர் நிர்வாகம் அழைத்துள்ளது. இந்தச் சதத்திற்கான காரணத்தைக் கேட்டதும் அங்குள்ள அனைவருக்குமே அதிர்ந்து போனார்கள். ஏனென்றால், அந்த சத்தம் மீன்களில் இருந்து வந்ததாம்.

இரவு நேரங்களில் ஆக்டிவாக உள்ள மீன்கள் தான் இந்த குழப்பமான சத்தத்தை ஏற்படுத்துகிறது. இனச்சேர்க்கை நேரங்களில் மீன்கள் இதுபோன்ற சத்தத்தைக் கிளப்புவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதை உறுதி செய்ய அப்பகுதியில் மைக்குகளை ஆய்வாளர்கள் நிறுவியுள்ளனர். பிளாக் டிரம் என்ற வகை மீன்கள் பொதுவாகக் குளிர்காலத்தில் இனச்சேர்க்கையில் ஈடுபடும். அப்போது ஏற்படும் இந்த சத்தம் 165 டெசிபல் வரை இருக்குமாம். இதுவே அங்கு வினோதமான சத்தத்திற்கு காரணமாம்.

Chella

Next Post

சிறைகளில் அதிகளவில் கர்ப்பமாகும் பெண்கள்..!! 196 குழந்தைகள் பிறப்பு..!! அதிர்ச்சியூட்டும் ரிப்போர்ட்..!!

Fri Feb 9 , 2024
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள சிறைச் சாலைகளில் பெண் கைதிகள் அதிகளவில் கர்ப்பமாக இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இதுவரை 196 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைகள் என்பது சீர்திருத்தத்திற்கானவைதான். ஆனால், சிறைகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்றுள்ள சம்பவம் குறித்து சமூக சேவகர் அமிக்ஸ் க்யூரி’ கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு […]

You May Like