அவல நிலையில் அரசுப் பள்ளிகள்.. ஊர் ஊராக உங்கள் தந்தைக்குச் சிலை வைப்பது முக்கியமா? CM ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி..!

67bc6feae8ae1 annamalai slams dmks language policy hypocrisy 241101450 16x9 1

ஊர் ஊராக உங்கள் தந்தைக்குச் சிலை வைப்பது முக்கியமா அல்லது அரசுப் பள்ளிகளுக்கு கட்டிடங்கள் முக்கியமா? என்று முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்..


இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் “ திருவள்ளூர் மாவட்டம் பாலவாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் ஊத்துக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் மொத்தம் 1,000 மாணவ மாணவியருக்கு மேல் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளிகளுக்குப் போதிய கட்டிடங்கள் இல்லாததால், மாணவ, மாணவியர், மைதானத்தில் தரையில் அமர்ந்து படித்து வருகின்றனர்.

பெற்றோர்களின் கடின உழைப்பில், மாணவர்கள் படித்து சாதனை செய்வதில் எல்லாம், தங்கள் ஆட்சியின் ஸ்டிக்கர் ஒட்டி ஏமாற்றிக் கொண்டிருக்கும் திமுக அரசு, உண்மையில் அரசுப் பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுப்பதில்லை என்பதை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டம் உட்பட, தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளின் நிலையைப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.

ஆட்சிக்கு வந்த உடன், 10,000 பள்ளிகளுக்கு புதிய கட்டிடம் கட்டிக் கொடுப்போம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்த திமுக, ஆட்சி முடியப் போகும் தருணத்திலும் கூட, எந்த மாவட்டத்தில் எத்தனை பள்ளிகளுக்குக் கட்டிடங்கள் கட்டியுள்ளார்கள் என்பதைக் கூற மறுத்து வருகிறார்கள். இந்த அழகில், சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கடிதம் எழுதப் போகிறேன் என்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் நாடகம் வேறு.

“Out of Contact” முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்களே, ஊர் ஊராக உங்கள் தந்தைக்குச் சிலை வைப்பது முக்கியமா அல்லது அரசுப் பள்ளிகளுக்கு கட்டிடங்கள் முக்கியமா?” என்று குறிப்பிட்டுள்ளார்..

Read More : “விஜய்யின் அப்பாவுக்கே தவெகவில் மரியாதை இல்ல..” திமுகவில் இணைந்த பின் பி.டி. செல்வகுமார் ஆவேசம்..!

RUPA

Next Post

இந்த சிறிய நாட்டில் நீங்கள் 10,000 சம்பாதித்தால், இந்தியாவில் நீங்கள் கோடீஸ்வரர் ஆவது உறுதி.!

Thu Dec 11 , 2025
உலக வரைபடத்தில் சிறிய புள்ளிகளாகத் தோன்றும் சில நாடுகளின் நாணயங்கள் உலகப் பொருளாதாரத்தில் மிகவும் சக்திவாய்ந்தவை. அவற்றில் ஒன்று ஜோர்டானிய தினார். 1.12 கோடி மக்கள் தொகை மட்டுமே கொண்ட இந்த நாட்டின் நாணயம் இந்திய ரூபாயை விட மிகவும் மதிப்புமிக்கது. தற்போதைய புள்ளிவிவரங்களின்படி.. 1 ஜோர்டானிய தினார் தோராயமாக ரூ.126.8 இந்திய ரூபாய் மதிப்புடையது. அதாவது, ஒரு இந்திய ரூபாயின் மதிப்பு 0.00788 ஜோர்டானிய தினார் மட்டுமே. ஜோர்டானில் […]
jordan currency

You May Like