உலகில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் எண்ணெய்களில் பாமாயில் (Palm Oil) ஒன்றாகும். சாதாரணமாக, இதன் மீது “ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்” என்ற தவறான கருத்து நிலவுகிறது. ஆனால் உண்மையில், பாமாயில் மிதமாக உட்கொண்டால் பல ஆரோக்கிய நன்மைகள் உண்டு. இதன் ஆரோக்கிய மற்றும் ஊட்டச்சத்து அம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.
பாமாயில் பனை மரத்தின் பழத்தின் கூழிலிருந்து பெறப்படுகிறது. சுத்திகரிக்கப்படாத பாமாயில் சிவப்பு நிறத்தில் இருக்கும், ஏனெனில் இதில் பீட்டா-கரோட்டின் (Vitamin A precursor) நிறைந்துள்ளது. ஆனால் சுத்திகரிப்பு செய்யும் போது இந்த கரோட்டின்கள் சில அளவு குறையலாம். பாமாயில் சுமார் 45% நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள், 40% ஒற்றை நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் (MUFA) மற்றும் 10% பாலி நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் (PUFA) கொண்டுள்ளது.
MUFA (Monounsaturated Fatty Acids): இதய ஆரோக்கியத்திற்கு நல்லது, இரத்த கொழுப்பை கட்டுப்படுத்த உதவும்.
PUFA (Polyunsaturated Fatty Acids): மூளை செயல்பாடு மற்றும் செல் வளர்ச்சிக்கு உதவும்.
பாமாயில் ஒரு பல்துறை, நிலையான மற்றும் மலிவான எண்ணெய், அதனால் உணவுத் துறையில், குறிப்பாக பேக் செய்யப்பட்ட உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
பாமாயில் உண்மையில் தீங்கு விளைவிக்குமா? பிரபல குழந்தை மருத்துவ நிபுணர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் அருண் குமார் கூறியது: பாமாயில் 40% நிறைவுற்ற கொழுப்பு மற்றும் 40% மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகளை கொண்டுள்ளது. இது உடல் பருமன் அல்லது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் என்று எந்த ஆராய்ச்சியும் நிரூபிக்கவில்லை. ரேஷன் கடைகளில் கிடைக்கும் பாமாயில் மிகவும் குறைந்த விலையில் தரமானது, அதனால் மக்கள் தவறாக “தீங்கு தரும்” என கருதுகிறார்கள். மிக அதிகமாக பயன்படுத்துவதால் மட்டுமே கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிகரிக்கும் அபாயம் உண்டு.
ஆராய்ச்சி விளக்கம்: பாமாயில் அதிகப்படியான நிறைவுற்ற கொழுப்பு கொண்டதாக கருதப்படுகிறது, ஆனால் அதனால் இரத்தக் கொழுப்பு அதிகரிப்பது அல்லது இதய நோய் அபாயம் அதிகரிப்பது எந்த ஆராய்ச்சியாலும் நிரூபிக்கப்படவில்லை. மற்றா எண்ணெய்களைப் போலவே, மிதமான அளவில் உட்கொள்வதுதான் முக்கியம்.
Read more: நீரிழிவு நோயாளிகளுக்கான சிறந்த பழம் இதுதான்! இது ரத்த அழுத்தம், கொழுப்பையும் குறைக்கவும் உதவும்!