பூஜா ஹெக்டே மூக்குக்கு அறுவைசிகிச்சை செய்யப்போகின்றாரா?

பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே தனது மூக்கிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்போவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

தமிழில் ’முகமூடி’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே . பின்னர் ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். முன்னணி கதாநாயகர்களுடன் ஏராளமான தெலுங்கு திரைப்படங்கள் நடித்து அந்த படங்கள் வெற்றியானதை அடுத்து மீண்டும் தமிழில் பீஸ்ட் திரைப்படம் நடித்தார். தெலுங்கில் மகரிஷி, ராதே ஷ்யாம் , ஆச்சார்யா , ஒக்கலைலா கொசம் , போன்ற பல திரைப்படங்கள் நடித்துள்ளார்.

இந்நிலையில் அவர் தனது மூக்குக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தெலுங்கு படத்தில் ’புட்ட பொம்மா ’ என்ற பாடலில் அல்லு அர்ஜுன் உடன் ஆடியதன் மூலம் மிகப்பெரிய வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தது. புட்ட பொம்மா என்றால் கூடை போன்ற அழகான பொம்மை வடிவம் என்றும் பொம்மை கூடை எனவும் பொருள்படும். அந்தப்படத்திலும் அவர் பொம்மை போல அழகான தோற்றத்தில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளார்.

மூக்கு அறுவை சிகிச்சைக்கா பூஜா வெளி நாட்டுக்கு செல்ல இருப்பதாகவும் மூக்கின் அமைப்பை மாற்றிக் கொள்வதற்காக அவர் காஸ்மெடிக் சர்ஜரி மேற்கொள்ள இருப்பதாக கூறப்பட்டு வருகின்றது. அழகான மூக்கு அப்படியே இருக்கட்டுமே என ரசிர்கள் கூறிவருகின்றனர். ஆனால் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை அவர் வெளியிடவில்லை.

Next Post

பிரபல கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை …

Sun Oct 2 , 2022
சென்னையில் தனியார் கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த பொத்தேரியில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகின்றது. இக்கல்லூரியில் பி.டெக் முதல் ஆண்டு படித்து வந்த மாணவர் முகிலு விஸ்வநாதன். இவர் மத்தியபிரதேசத்தில் சொங்காபூர் ரயில்வே நகர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் மகன். மத்திய பிரதேசத்தில் இருந்து வந்து இங்கு தங்கி படித்து வந்த மாணவர் கடந்த […]

You May Like