பிரபல கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை …

சென்னையில் தனியார் கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த பொத்தேரியில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகின்றது. இக்கல்லூரியில் பி.டெக் முதல் ஆண்டு படித்து வந்த மாணவர் முகிலு விஸ்வநாதன். இவர் மத்தியபிரதேசத்தில் சொங்காபூர் ரயில்வே நகர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் மகன்.

மத்திய பிரதேசத்தில் இருந்து வந்து இங்கு தங்கி படித்து வந்த மாணவர் கடந்த வியாழக்கிழமை அன்று வழக்கம்போல் வகுப்புச் சென்றுவிட்டு கல்லூரியிலேயே உள்ள விடுதிக்கு சென்றுள்ளார். அவரது அறைக்கதவி 2 நாளாக பூட்டியே கிடந்தது. இதனால் சந்தேகமடைந்து நண்பர்கள் கதவை திறந்து உள்ளே பார்த்தபோது மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அப்போது அறையையும் சோதனை செய்தனர்.

அவர்களுக்கு மாணவர் எழுதிய கடிதம் கையில் கிடைத்தது. அந்த கடிதம் இந்தியில் இருந்தது. அதில், எனது தாய்க்கும் தந்தைக்கும் எனது மன்னிப்பை கோருகின்றேன். என்னை மன்னித்துவிடுங்கள். நான் சிறு வயதில் இருந்து படிப்புக்காக எவ்வளவோ செலவு செய்துள்ளேன். ஆனால் என்னால் படிப்பில் முன்னேற முடியவில்லை. உங்கள் மகன் என கூறுவதற்கே எனக்கு வெட்கமாக உள்ளது. நான் , இனியும் உங்கள் பணத்தை வீணடிக்க வேண்டாம். இதனால் நான் தற்கொலை செய்து கொள்கின்றேன். என்னை மன்னித்துவிடுங்கள் ’’ என எழுதிய கடிதத்தின் கடைசியில் என் தந்தையின் தொலைபேசி எண் என குறிப்பிட்டு தகவல் தெரிவிக்குமாறு மாணவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

எனினும் எதற்காக தற்கொலை செய்து கொண்டான் என்பதை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் கல்லூரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Post

முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதி …

Sun Oct 2 , 2022
உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரும் , அம்மாநில முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவ் கடந்த 2017ம் ஆண்டு கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து வெளியேறினார். இதையடுத்து பொறுப்பில் இருந்து அவர் விடுவித்துக் கொண்டார். பின்னர் அவரது மகன் அகிலேஷ் யாதவ் அக்கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார். இந்நிலையில் முலாயம் சிங் யாதவுக்கு திடீரென உடல்நிலை […]

You May Like