நவீன வாழ்க்கை என்பது இன்று வேகத்தின் மேல் இயங்கும் ஒரு சக்கரமாகவே மாறிவிட்டது. காலில் சக்கரம் கட்டிக் கொண்டு பறக்கும் இன்றைய மனிதன், எல்லா செயல்களையும் உடனடியாக முடிக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்போடு வாழ்கிறான். இதில் சமையலும் விதிவிலக்காக இல்லை.
ஆண்-பெண் பேதமின்றி இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பங்களில், காலையில் எழுந்தவுடன் உணவு தயாரித்தல் ஒரு மிகப்பெரிய சவாலாகவே உள்ளது. காலை உணவு மட்டுமல்லாமல் மதிய உணவையும் தயாரிக்க வேண்டிய கட்டாயம், குழந்தைகளையும், கணவரையும் தயார் செய்து அனுப்புவது என சமையல் நேரம் பெரும் அழுத்தத்தை தருகிறது. இதனையடுத்து, அலுவலக வேலை முடிந்து சோர்வுடன் வீடு திரும்பும் பெண்களுக்கு இரவு உணவுக்கான பொறுப்பும் காத்திருக்கிறது.
இந்தவகையில், சமையலைச் சீக்கிரம் முடிக்க உதவும் முறைகளைப் பயன்படுத்தும் நவீன குடும்பங்களில், பிரஷர் குக்கர் முக்கிய இடம் பிடித்துவிட்டது. ஆனாலும் பிரஷர் குக்கரில் சமைப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதா..? கெட்டதா..? என்ற கேள்வி பலருக்கு எழும். இதன் நன்மைகள் குறித்து முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
வயிறு நீண்ட நேரம் நிரம்பியிருக்கும்: பிரஷர் குக்கரில் சாதம் சமைத்தால், அரிசியில் உள்ள கஞ்சியும் அதில் தங்கிவிடும். அந்த மாவுச்சத்து காரணமாக, இது நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்திருக்கும். மேலும், இது நீண்ட நேரம் பசி எடுப்பதைத் தடுக்கிறது. பசியின்மை குறைவதால் எடையும் கட்டுக்குள் இருக்கும். எடை குறைக்க விரும்புபவர்கள் பிரஷர் குக்கரில் சமைத்த அரிசியை சாப்பிட்டு பலன் பெறலாம்.
பாக்டீரியா எதிர்ப்பு: பிரஷர் குக்கரில் அரிசி சமைக்கும்போது, அதில் எந்த பாக்டீரியாவும் தங்க வாய்ப்பில்லை. ஆகையால், பிரஷர் குக்கரில் சமைத்து சாப்பிடுவது நல்லது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
செரிமானத்தை மேம்படுத்துகிறது: பிரஷர் குக்கரில் சாதம் வைக்கும்போது அது நன்றாக வேகும். இது செரிமானம் சீராக நடக்க உதவுகிறது. இதனால் செரிமானத்திலும் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என்று சொல்லப்படுகிறது.
போதுமான ஊட்டச்சத்து: நீங்கள் சாதம் தயார் செய்ய பிரஷர் குக்கர் அல்லது ரைஸ் குக்கரைப் பயன்படுத்தினால், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அரிசியிலேயே இருக்கும். அரிசியை வேகவைத்து, அதில் உள்ள தண்ணீரை வடிகட்டும்போது, அதன் பல ஊட்டச்சத்துக்கள் இழக்கப்படுகின்றன.
பாக்டீரியா எதிர்ப்பு: பிரஷர் குக்கரில் அரிசி சமைக்கும்போது, அதில் எந்த பாக்டீரியாவும் தங்க வாய்ப்பில்லை. ஆகையால், பிரஷர் குக்கரில் சமைத்து சாப்பிடுவது நல்லது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Read more: புது வரலாறு : 40 ஆண்டுகளில் விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர் சுபான்ஷு சுக்லா! யார் இவர்?