ஆகஸ்ட் 1 முதல் கூகுள் பே (Google Pay) மற்றும் பிற யுபிஐ (UPI) செயலிகளுக்கு புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
ஆகஸ்ட் 1 முதல் கூகுள் பே (Google Pay) மற்றும் பிற யுபிஐ (UPI) செயலிகளுக்கு புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள், யுபிஐ செயலிகளின் செயல்திறனை மேம்படுத்தவும், பயனர்களை மோசடிகளிலிருந்து பாதுகாக்கவும் உதவும். பேங்க் பேலன்ஸ் சரிபார்ப்புகள் ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே பயன்படுத்த முடியும். மொபைல் நம்பர் இதன் இணைக்கப்பட்ட அக்கவுண்ட் சரிபார்ப்புகள் ஒரு நாளைக்கு 25 முறை மட்டுமே பயன்படுத்த முடியும்.
ஆட்டோபே வழியிலான பணம் செலுத்தும் பரிவர்த்தனைகள் 3 நிலையான நேர இடைவெளிகளில் மட்டுமே அனுமதிக்கப்படும். தோல்வியுற்ற பரிவர்த்தனை நிலையை ஒரு நாளைக்கு 3 முறை மட்டுமே பார்க்க முடியும். பரிவர்த்தனை வங்கியை பொறுத்து, ஒரு டிரான்சாக்ஷனுக்கு அதிகபட்சமாக ரூ.6 முதல் ரூ.10 வரை கட்டண விதிக்கப்படும். பணம் நேரடியாக வணிகரின் ஐசிஐசிஐ கணக்குக்கு சென்றால் கட்டணம் இல்லை. எனினும், UPI பயன்படுத்தும் பொதுமக்களுக்கு இப்போதைக்கு கட்டணம் இருக்காது.
EMI-கள், பயன்பாட்டு பில்கள் மற்றும் சந்தா போன்ற தானாக பணம் செலுத்தும் திட்டமிடப்பட்ட கட்டணங்களுக்கான நேர இடைவெளிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்களின் முதன்மை நோக்கம் UPI அமைப்பில் தேவையற்ற சுமையைக் குறைப்பது, சேவையகங்களை மேம்படுத்துவது மற்றும் பரிவர்த்தனைகளை வேகமாகவும் பாதுகாப்பாகவும் மாற்றுவதாகும்.