சபாநாயகர் அப்பாவு இன்று பிரபல செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.. அப்போது அவரிடம் தவெகவின் அரசியல் வருகை குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.. அதற்கு பதிலளித்த அவர் விஜய்யை காட்டமாக விமர்சித்தார்.. தவெகவை ஒரு கட்சியாக நடத்துகிறார்களா..? ஒரு அரசியல் இயக்கமாக நடத்துகிறார்களா? மக்களை பற்றி சிந்தித்து நடத்துகிறார்களா.? கரூரில் 41 பேரை கொன்றுவிட்டு சென்னை ஓடி வந்து விட்டார்கள்.. மனசாட்சி உள்ள யாரும் அப்படி போகமாட்டார்கள்.. முதல்வர் அன்றிரவே கரூர் சென்றார்..
ஆட்சியில் இருப்பவர்கள் தவெகவினரை அடக்க வேண்டும் என்றால், சென்னை வந்த போதே 41 பேர் உயிரிழப்புக்கு காரணம் என்று சொல்லி விஜய், ஆதவ், புஸ்ஸி ஆனந்தை கைது செய்திருப்பார்கள்.. காலை 7.50 வருகிறேன் என்று சொல்லிவிட்டு இரவு 7 மணிக்கு சென்று நிற்கிறீர்கள்.. விஜய் வாகனம் மீது பல்வேறு விமர்சனங்கள் இருக்கிறது.. வாகனத்தில் இருந்து விஜய் கையை காட்டி இருந்தாலே கூட்டம் வெளியேறி இருக்கும்..
ஆதவ் அர்ஜுனா 50 இளைஞர்களை வைத்துக் கொண்டு பணம் கொடுத்து கூட்டத்தை கூட்டுகிறார்.. ஒரு இளைஞர் 200 பேரை அழைத்து வருவதற்காக பணம் கொடுக்கப்படுகிறது.. 10,000 பேர் விஜய் வாகனத்தை சுற்றி நிற்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் பணம் அளிக்கப்படுகிறது.. 8 மணி நேரம் தாமதமாக விஜய் வந்ததால் தான் 41 பேர் இறப்புக்கு காரணம்.. 41 பேர் மரணத்தை பார்த்து வாகனத்தில் இருந்து ரசித்த விஜய் ஒரு மனிதப்பிறவியா..?
விஜய் தனது மனைவி, பிள்ளைகளுக்கு இடம் தராமல் தவிக்கவிட்டவர். விஜய்.. வீட்டில் இடம் வேண்டும் என விஜய்யின் மனைவி நீதிமன்றத்தை அணுகி உள்ளார். விஜய் எத்தனை திருமணம் செய்து கொண்டாலும் அதை பற்றி கவலை இல்லை.. ஆனால் தன் மனைவிக்கு விஜய் என்ன பதில் சொல்லப் போகிறார்? சொந்த மனைவி, பிள்ளைகளை கவனிக்காத விஜய் மக்களுக்கு என்ன செய்யப் போகிறார் என்று தான் மக்கள் கேட்கின்றனர்..” என்று தெரிவித்தார்..
Read More : அமைச்சர்கள் நிற்கும் தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கீடு.. திமுக – அதிமுக டீலிங்.. சீமான் விமர்சனம்..!



