“உனக்கு என்னைவிட கள்ளக்காதலிதான் முக்கியமா?” ஆத்திரத்தில் 7 மாத குழந்தையின் தாய் செய்த காரியம்…

60802cdc1a20a9440ea1c5032a611878

கள்ளத்தொடர்பு இன்று பல குடும்பங்களில் பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது. இதனால் கணவன், மனைவி இடையேயான நம்பிக்கை முற்றிலும் சிதைகிறது. குடும்பத்தில் தினமும் சண்டை, மனவேதனை, பிரிவு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. பெற்றோரின் தவறான முடிவால் குழந்தைகளின் வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. ஒரு நிமிட தவறான உறவு, பல ஆண்டுகளாக கட்டிய குடும்ப வாழ்க்கையையே சீர்குலைத்துவிடுகிறது. அந்த வகையில் பெங்களூரில் நடந்துள்ள சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


பெங்களூரு பரப்பன அக்ரஹாரா அருகே சிக்மகளூருவை சேர்ந்தவர் ஷரன் கவுடா. பெங்களூருவில் கேப் டிரைவராக வேலை செய்து வரும் இவருக்கு, 24 வயதான சானிகா கவுடா என்ற மனைவி உள்ளார். கடந்த 1 வருடத்திற்கு முன்பு இருவருக்கும் திருமணம் ஆன நிலையில், இந்த தம்பதிக்கு 7 மாத குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில், ஷரன் கவுடாவுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.

இது குறித்து கர்ப்பிணியாக இருந்த அவரது மனைவி சானிகாவுக்கு தெரியவந்துள்ளது. இதனால் அவர் தனது கணவனை கண்டித்துள்ளார். ஆனால் அவரது கணவர் தொடர்ந்து கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஒரு கட்டத்தில் தனது கணவரின் செயலால் விரக்தி அடைந்த சானிகா, நிறைமாத கர்ப்பிணியாக தனது தாய் வீட்டிற்க்கு சென்றுவிட்டார். குழந்தை பிறந்த பிறகும் அவர் தனது கணவர் வீட்டிற்க்கு வரவில்லை.

இந்நிலையில், தனது கள்ளக்காதலியுடன் பேசிய ஆடியோ ஒன்றை, கணவர் தனது மனைவியின் மொபைலுக்கு அனுப்பியுள்ளார். கணவர் அனுப்பிய ஆடியோவை கேட்டு அதிர்ச்சியடைந்த சானிகா, கணவரை வீடியோ காலில் அழைத்து கதறி அழுது வாக்குவாதம் செய்துள்ளார். வீடியோ கால் ஓடிக்கொண்டிருக்கும் போதே, தனது 7 மாத குழந்தை தூங்கிக் கொண்டிருந்த அறையில் மின்விசிறியில் சானிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில், சானிகாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் பரப்பன அக்ரஹாரா போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கு தூண்டுதல், வரதட்சணை கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து, தலைமறைவாக இருக்கும் அவரது கணவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Also Read: தினமும் 40 நிமிஷம் இப்படி நடந்து பாருங்க… உடம்புல வர்ற மாற்றத்தை நீங்களே உணர்வீங்க!

Saranya

Next Post

"இந்தப் பொண்ணு என்னோட பையனைக் கெடுத்துட்டா…" தாய் அளித்த பரபரப்பு புகார்! வீட்டில் பெற்றோர் இல்லாத போது சிறுவனுக்கு நடந்த சம்பவம்…

Mon Jul 27 , 2026
குமரி மாவட்டம் ஆற்றூர் பகுதியை சார்ந்தவர் 19 வயதான நிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு நிஷாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் எட்டு மாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறியுள்ளனர். மேலும், மருத்துவர்கள் கணவரின் விவரம் குறித்து கேட்டதற்கு அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால், சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் இது குறித்து […]
aus women birth 17 hours pregnant 11zon

You May Like