லெபனானில் குடியிருப்பு கட்டிடம் மீது இஸ்ரேல் தாக்குதல்.. பலர் பலி.. தொடரும் பதற்றம்..! போர் எப்போது முடியும்..?

lebonon attack 1

கிழக்கு லெபனானில் உள்ள பால்பெக் நகரில் ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பலர் உயிரிழந்ததாகவும், பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்றும் லெபனான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.. இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள குடும்பங்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..


இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.. அதில் பல மாடிகள் கொண்ட ஒரு கட்டிடம் முற்றிலும் இடிந்து விழுந்த நிலையில், மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளை அகற்றத் தொடங்கியிருப்பது தெரிகிறது.

இதனிடையே, இஸ்ரேல், ஈரானின் ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் ஒரு அணு ஆராய்ச்சி மையத்தை குறிவைத்து வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக அறிவித்தது. அதற்கு பதிலடியாக Iran, இஸ்ரேல் மற்றும் வளைகுடா பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தி, அமெரிக்க தூதரகங்களை குறிவைத்ததுடன், எரிசக்தி விநியோகம் மற்றும் பயணச் சேவைகளையும் பாதித்ததாக தகவல்கள் வெளியாகின.

போர் பல வாரங்கள் நீடிக்கலாம்: டிரம்ப்

போர் தொடங்கி நான்கு நாட்கள் ஆன நிலையில், அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் இந்தப் போர் பல வாரங்கள் அல்லது அதற்கு மேலாக நீடிக்கலாம் என கூறியுள்ளார். இதுவரை ஈரானில் சுமார் 800 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று தெஹரான் நகரிலும், லெபனானிலும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் வந்தன. லெபனானில், ஹிஸ்புல்லா போராளிகள் மீது பதிலடி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்தது. இதே நேரத்தில், சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடந்ததாக கூறப்படுகிறது.

ஈரான் இஸ்ரேல் மீது பல டஜன் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பெரும்பாலான ஏவுகணைகள் வானில் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மோதல் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

மற்றொரு முக்கிய தகவலாக, அமெரிக்க பாதுகாப்புத் துறை , ஞாயிற்றுக்கிழமை குவைத்தில் உள்ள ஒரு கட்டளை மையத்தில் நடந்த ட்ரோன் தாக்குதலில், அமெரிக்க இராணுவ ரிசர்வ் படையைச் சேர்ந்த நான்கு வீரர்கள் உயிரிழந்ததாக அறிவித்தது. அந்த தாக்குதலில் மேலும் இரண்டு சேவைப் பணியாளர்களும் உயிரிழந்தனர்.

போர் எப்போது, எப்படி முடியும்..?

இந்த போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருவதால், இது எப்போது மற்றும் எப்படி முடிவடையும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஈரானின் ஏவுகணை திறன்களை அழித்தல், அதன் கடற்படையை செயலிழக்கச் செய்தல், அணு ஆயுதம் பெறுவதைத் தடுக்குதல் மற்றும் அதன் கூட்டாளி ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்தச் செய்வது போன்ற பல இலக்குகளை அமெரிக்க நிர்வாகம் முன்வைத்துள்ளது.

ஆரம்பத்தில் நடந்த அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாகவும், ஈரான் மக்கள் தங்கள் அரசை அகற்ற வேண்டும் என்றும் டிரம்ப் கூறியிருந்தார். ஆனால் அதன் பின்னர், ஆட்சிமாற்றம் தான் இலக்கு அல்ல என மூத்த அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

நேற்று பேசிய டிரம்ப், இந்தப் போருக்குப் பிறகு ஈரானில் அதிகாரத்தை கைப்பற்ற “உள்ளிருந்து ஒருவரே” சிறந்த தேர்வாக இருக்கலாம் எனக் கூறினார். மேலும், முன்னாள் ஈரான் அரசர் ஷாவின் நாடுகடத்தப்பட்ட மகன் ரெஸா பஹ்லவி குறித்து தனது நிர்வாகம் தீவிரமாக யோசிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

“நாங்கள் நினைத்திருந்தவர்கள் இப்போது உயிருடன் இல்லை. மிக மோசமான நிலை என்றால், இதை எல்லாம் செய்துவிட்டு, முந்தையவரைப் போலவே மோசமான ஒருவர் அதிகாரத்திற்கு வரலாம். அது நடக்கவும் ,” என்று டிரம்ப் கூறினார்.

Read More : இந்தியாவிடம் 25 நாட்களுக்கு தான் கச்சா எண்ணெய் இருக்கு.. பெட்ரோல், டீசல் விலை உயருமா..? மத்திய அரசு முக்கிய தகவல்..!

RUPA

Next Post

ஈரான் - இஸ்ரேல் போர் : இந்தியர்களுக்காக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! கட்டுப்பாட்டு அறை அமைப்பு..!

Wed Mar 4 , 2026
மத்திய கிழக்கில் போர் மேலும் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்தச் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இன்று மத்திய வெளியுறவு அமைச்சகம் புது டெல்லியில் ஒரு சிறப்பு கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறை, மேற்கு ஆசியா மற்றும் வளைகுடா பிராந்தியம் ஆகிய பகுதிகளில் உருவாகி வரும் தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது. இது […]
Iran Israel 3

You May Like