ஆட்டத்தை ஆரம்பித்த இஸ்ரேல்! வான்வழித் தாக்குதலில் 3 ஹிஸ்புல்லா போராளிகள் கொல்லப்பட்டனர்!

Israeli Airstrike: தெற்கு லெபனானில் நடத்திய வான்வழித் தாக்குதலில் இரண்டு கமாண்டர்கள் உட்பட மூன்று ஹிஸ்புல்லா போராளிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்ட அறிக்கையின்படி, “ராட்வான் படைகளின் மேற்கு பிராந்தியத்தின் ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகள் பிரிவின் தளபதி, முஹம்மது ஹுசைன் ஷாஹோரி தெற்கு லெபனானில் உள்ள க்ஃபார் டூனினில் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். இவர் இஸ்ரேல் மீதான் ராக்கெட் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தாார். இவருக்கு பக்க பலமாக இருந்த ஹிஸ்புல்லாவின் ராக்கெட் மற்றும் ஏவுகணைப் பிரிவின் மற்றொரு தலைவரான மஹ்மூத் இப்ராஹிம் ஃபட்லல்லாவும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்.

மூன்றாவதாக ஹிஸ்புல்லாவின் கடலோர பாதுகாப்புப்படை பிரிவின் தளபதி இஸ்மாயில் யூசுப் பாஸ் இந்த ராக்கெட் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார்” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மூவரின் மரணத்தையும் ஹிஸ்புல்லா அமைப்பு உறுதிசெய்திருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு, ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக்குழு ஹிஸ்புல்லா பதிலடி கொடுத்து வருகிறது. ஹிஸ்புல்லாவின் தாக்குதல் பெரிய அளவில் இல்லையென்றாலும் கூட, இவர்களது தாக்குதல் இஸ்ரேலுக்கு தொடர்ந்து எரிச்சலை கிளப்பி வந்திருந்தது. அதே நேரம், ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Readmore: இளசுகளை கவர வருகிறது Pulsar F250..!! அட்டகாசமான அம்சங்கள்..!! விலை எவ்வளவு தெரியுமா..?

Kokila

Next Post

குட் நியூஸ்..!! இனி ரேஷன் கடைக்கு ஒருமுறை சென்றாலே போதும்..!! ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு..!!

Wed Apr 17 , 2024
ரூ.1,000 உரிமைத்தொகை விநியோகம் காரணமாக, புது ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளன. ஒரு லட்சம் கார்டுகள் அச்சடிக்கப்படாமல் தேங்கி நின்றன. மேலும், மருத்துவ காப்பீட்டு திட்ட சலுகைக்கும் ரேஷன் கார்டுதான் முக்கிய ஆவணமாக உள்ளதால், ரேஷன் கார்டுகளை உடனடியாக தர வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்தன. இந்நிலையில், 45,509 புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படுவதாக அரசு தரப்பில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதில், “வெள்ளம் பாதித்த தூத்துக்குடி, […]

You May Like