திருமணம் செய்ய சொல்லி டார்ச்சர் செய்த 33 வயதுடைய கள்ளக்காதலி..! 22 வயது காதலன் செய்த பகீர் சம்பவம்..!

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் காதலனை தேடி சென்ற பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புளியந்தோப்பை சேர்ந்த வேலுச்சாமிக்கு சிவகாமி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். இதில், 2வது மகளான தீபாவிற்கு(33) கடந்த 2014ம் ஆண்டு நிர்மல் என்பவருடன் திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக 2 ஆண்டுகளிலேயே விவாகரத்து செய்தார். இதனை தொடர்ந்து தீபா பெற்றோருடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்து வந்த தீபா, கடந்த 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று நண்பரை பார்த்து வருவதாக தனது தாயாரிடம் கூறிவிட்டு வேலூர் மாவட்டம் குடியாத்தம் சென்றுள்ளார்.  சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து மைசூர் செல்லும் விரைவு ரயிலில் தீபா குடியாத்தம் சென்றார். தனது தாயார் சிவகாமிக்கு போன் செய்து குடியாத்தம் வந்துவிட்டதாக கூறியிருக்கிறார்.

அதன் பிறகு, தீபா வீட்டிற்கு திரும்பாததால், சந்தேகமடைந்த பெற்றோர் மகளின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது செல்போன் சிவிட்ச் ஆப் என வந்ததால், அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, புளியந்தோப்பு காவல் நிலையத்தில் கடந்த 16ம் தேதி பெற்றோர் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன.

இதில், வேலூர் மாவட்டம் கே.வி. குப்பத்தை சேர்ந்த ஹேமந்த்ராஜ்(22) என்பவர் சென்னையில் ஒரு கம்பெனியில் வேலை செய்த போது, அதேப்பகுதியில் தீபா செல்போன் கடையில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. காதலனான ஹேமந்த்ராஜை சந்திக்க சென்றதும், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தியதும் தெரியவந்தது.

இதில், வேலூர் மாவட்டம் கே.வி. குப்பத்தை சேர்ந்த ஹேமந்த்ராஜ்(22) என்பவர் சென்னையில் ஒரு கம்பெனியில் வேலை செய்த போது, அதேப்பகுதியில் தீபா செல்போன் கடையில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. காதலனான ஹேமந்த்ராஜை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தீபா அடிக்கடி கேட்டு வந்தாராம். ஆனால் தீபாவுக்கு தன்னைவிட 8 வயது அதிகம் என்பதால், ஹேமந்தராஜ் திருமணத்திற்கு மறுத்துள்ளார்.

ஆனால் தீபா தொடர்ந்து காட்டாயப்படுத்தியதால் அவரை கொல்ல திட்டமிட்ட ஹேமந்தராஜ், கடந்த 14-ம் தேதி குடியாத்தம் வருமாறு அழைத்துள்ளார். அதை நம்பி குடியாத்தம் ரயில் நிலையத்திற்கு வந்த தீபாவை அருகில் உள்ள நெட்டேரி மலைக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது தீபா திருமணம் குறித்து பேசியதால் ஆத்திரமடைந்த ஹேமந்தராஜ், மறைத்து வைத்திருந்த கத்தியால் தீபாவின் கழுத்தை அறுத்து கொன்றுள்ளார்.

பிறகு தீபாவின் செல்போனை அருகில் இருந்த ரயில்வே தண்டவாளத்தில் வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வந்துவிட்டார். அந்த பக்கம் போன பள்ளி மாணவிகள் செல்போனை எடுத்து வந்ததால் சிக்கினார். குடியாத்தம் டவுன் போலீசார் உதவியுடன், புளியந்தோப்பு போலீசார் நெட்டேரி மலை பகுதிக்கு ஹேமந்த்ராஜை அழைத்துச்சென்று தீபாவின் உடலை மீட்டனர்.

மேலும் ஹேமந்த்ராஜ் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காட்பாடி அருகே ரயிலில் இளம்பெண்ணை தாக்கி கீழே தள்ளிவிட்டு செல்போன் மற்றும் செயின் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

PM Modi | “மக்களின் சொத்துக்களை அபகரிக்கவே காங்கிரஸ் ஆட்சிக்கு வர முயற்சிக்கிறது…” பிரதமர் மோடி குற்றச்சாட்டு.!!

shyamala

Next Post

ஒரே நாளில் ரூ.1,000 ரூ.20 லட்சமாக மாறிய வருமானம்!… கவனத்தை ஈர்த்த கோடக் வங்கி!

Sat Apr 27 , 2024
Kotak Bank: கோடக் மஹிந்திரா வங்கியின் 18 லாட்களை வெறும் ரூ.1000 என்ற குறைந்த விலை வாங்கியதால், வர்த்தகர் ஒருவர் 20 லட்சம் ரூபாய் வரை பெரும் லாபம் ஈட்டியது சமூக ஊடகங்களில் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்துள்ளது. பல இந்திய தொழில் அதிபர்கள் தங்களுக்கான பில்லியன் டாலர் மதிப்பிலான தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கி சாதித்து காட்டி உள்ளனர். ஒரு சிலர் இந்தியாவின் பணக்கார பில்லியனர்கள் பட்டியலில் கூட இடம் பிடித்துள்ளனர். […]

You May Like