விண்வெளி ஆய்வு துறையின் கீழ் செயல்படும் இஸ்ரோவில் பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியிடங்கள்:
டெக்னிக்கல் உதவியாளர் – 12
துணை அதிகாரி – 1
டெக்னீஷியன் ‘B’ – 6
டிரைவர் – 4
வயது வரம்பு: இஸ்ரோவில் LPSC-வில் உள்ள இப்பணியிடங்களுக்கு குறைந்தபட்ச வயது 18 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபடியாக அனைத்து பதவிகளுக்கும் வயது வரம்பு 35 ஆகும். அரசு விதிகளின் படி தளர்வுகள் உண்டு.
கல்வித்தகுதி:
* டெக்னிக்கல் உதவியாளர் பதவிக்கு மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் பொறியியல் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
* துணை அதிகாரி பதவிக்கு Leading Fireman/ DCO உடன் 6 வருட அனுபவம் மற்றும் துணை அதிகாரிக்கான சான்றிதழ் தேவை (அல்லது) / B.Sc உடன் PCM தகுதி பெற்று, துணை அதிகாரிக்கான சான்றிதழ் மற்றும் 2 ஆண்டு அனுபவம் தேவை. கூடுதலாக கனரக வாகன ஓட்டுநர் உரிமம், உடற்தகுதி அவசியம்.
* டெக்னீஷியன் பதவிக்கு அந்தந்த தொழிற்பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
* கனரக வாகன ஓட்டுநர் பதவிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி, 5 ஆண்டுகள் அனுபவம் மற்றும் HVD ஓட்டுநர் உரிமம் தேவை.
* இலகுரக வாகன ஓட்டுநர் பதவிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி, 3 ஆண்டுகள் அனுபவம் மற்றும் LVD ஒட்டுநர் உரிமம் தேவை.
சம்பள விவரம்;
- டெக்னிக்கல் உதவியாளர் பதவிக்கு ரூ.44,900 முதல் ரூ.1,42,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
- துணை அதிகாரி பதவிக்கு ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும்.
- டெக்னீஷியன் பதவிக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும்.
- டிரைவர் பதவிக்கு ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு நடைமுறை
- இந்தப் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
- எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையாகக் கொண்டு தேர்வு நடைபெறும்.
- திறன் தேர்வு தகுதித் தேர்வாக மட்டும் கருதப்படும்; அதில் பெறப்படும் மதிப்பெண்கள் இறுதி தேர்வில் கணக்கில் எடுக்கப்படாது.
- துணை அதிகாரி (Sub Inspector) பதவிக்கு உடற்தகுதித் தேர்வும் நடத்தப்படும்.
- இறுதியாக, சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்ட பின்பு மட்டுமே பணி நியமனம் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி? இஸ்ரோ வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://www.isro.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் பதவிக்கு ஏற்ப மாறுபடும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்பக் கட்டணம் திரும்ப செலுத்தப்படும்.
கடைசி தேதி: ஆகஸ்ட் 26 வரை விண்ணப்பிக்கலாம்.