சென்னை வில்லிவாக்கத்தில் நடைபெற இருந்த தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் ரத்து என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.. இன்று முதல் ஏப்.6 வரை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.. எனினும் இந்த 8 நாட்களில் 4 நாட்களே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். மார்ச் 30, ஏப்ரல், 2,4, 6 ஆகிய தேதிகளில் வேட்புமனு தாக்கல் செய்யலாம். மீதமுள்ள 4 நாட்கள் அரசு விடுமுறை நாட்கள் என்பதால் அன்றைய தினங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது.
ஏப்ரல் 7 ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யபடும். வேட்புமனுக்களை திரும்ப பெற ஏப்ரல் 9 ம் தேதி கடைசி நாளாகும். அதன் பின்னர் வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். வேட்புமனு தாக்கலின் முதல் நாளான இன்று பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து பெரம்பூரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது நகராட்சி நிர்வாக துறையில் பணம் வாங்கி கொண்டு தகுதி அற்றவர்களுக்கு வேலை கொடுக்கப்படிருக்கு. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்காத திமுக அரசை தூக்கி ஏறிய வேண்டும். டாஸ்மாக்கிலும், நகராட்சி நிர்வாகத் துறையிலும் ரூ.1000 கோடி ஊழல் நடந்திருக்கு என திமுக அரசுக்கு எதிரான குற்றசாட்டை முன்வைத்தார்.
அதை தொடர்ந்து சென்னை கொளத்தூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கு விஜய்க்கு போலீசார் உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என தவெகவினர் குற்றசாட்டு முன்வைத்தனர். இந்த நிலையில் ஆதவ் அர்ஜூனா போட்டியிடும் வில்லிவாக்கம் தொகுதியில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் ரத்து என தகவல் வெளியாகியுள்ளது. பெரம்பூர், கொளத்தூரில் பிரச்சாரத்தை முடித்த நிலையில் விஜய் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.
Read more: Flash: காலையில் குறைந்து மாலையில் உயர்ந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் ஷாக்..!



