திமுகவின் தலைமை அலுவலகமாக அண்ணா அறிவாலயம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் நேற்றைய தினம் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க அண்ணா அறிவாலயத்துக்கு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டசபை தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ஆடலரசன் வந்திருந்தார். முன்னாள் எம்எல்ஏ ஆடலரசன், முதல்வர் ஸ்டாலினை சந்திக்க அனுமதி கோரியுள்ளார்.
ஆனால் அண்ணா அறிவாலயத்தின் வாயிலில் நின்றவர்கள் அவருக்கு அனுமதி வழங்கவில்லை. இதனால் கோபமான ஆடலரசன், ‛‛பட்டியலினத்தை சேர்ந்தவன் என்பதால் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க அனுமதி மறுக்கிறீர்களா? என கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் தனது பையில் இருந்த திமுகவின் உறுப்பினர் அடையாள அட்டையை தூக்கி தரையில் வீசியெறிந்து வெளியே சென்றார்.
இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் அனைத்து ஊடகங்களிலும் வெளியான நிலையில் தமிழக அரசியலில் புதிய சர்ச்சையை கிளப்பி இருந்தது. திமுக மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. இப்படியான நிலையில் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட உள்ளதாக சற்று முன் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் எம் எல் ஏ ஆடலரசன் 2016 சட்டசபை தேர்தலில் திருத்துறைப்பூண்டி தனி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற்து குறிப்பிடத்தக்கது.



