அடிதூள்.. ஜனவரி முதல் ரூ.2000 மகளிர் உரிமை தொகை..? திமுக அரசின் தேர்தல் மூவ்..!!

Magalir Urimai Thogai 4 2024 06 13959d94ae85e2aed3566ce5d26fd069 1

மகளிர் உரிமைத் தொகையை 2,000 ரூபாயாக உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது தமிழக அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான நலத்திட்டமாகும். 2023 ஆம் ஆண்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். குடும்ப தலைவிகளுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்கும் நோக்கத்தோடு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இந்த திட்டம் மூலம் மாதம் ரூ.1000 குடும்ப தலைவிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி ரூ.1000 பணம் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக தமிழகத்தில் விடுபட்ட குடும்ப தலைவிகள் அனைவரும் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு விண்ணப்பித்து வருகிறார்கள். 

குடும்ப தலைவி மட்டுமே இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டியது இல்லை என்றும், ஒரு குடும்பத்தில் தாய் இறந்துவிட்ட நிலையில், அந்த குடும்பத்தில் இருக்கும் 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டது. இதனிடையே அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால், மகளிர் உரிமைத் தொகை 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வாக்குறுதி அளித்து உள்ளார்.

இந்நிலையில், அரசும் அதை செயல்படுத்தும் மனநிலைக்கு வந்துள்ளது. இதற்காக, 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்குவது சாத்தியமா என்பது குறித்து ஆராய, நிதித் துறைக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது. நிதித்துறை சாதகமான அறிக்கை தந்தால் வரும் ஜனவரி முதல் உரிமை தொகை ரூ2 ஆயிரம் ஆக உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.

Read more: கடலூர் சிப்காட் பாதிப்பு… தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்…! ராமதாஸ் கோரிக்கை…!

English Summary

It has been reported that the Tamil Nadu government is planning to increase the women’s stipend to Rs 2,000.

Next Post

பெண்களே..!! இனி ரூ.5 லட்சம் மானியம் பெற இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்..!! தமிழ்நாடு அரசு சூப்பர் அறிவிப்பு..!!

Thu Sep 11 , 2025
விவசாயக் கூலிகளாக இருக்கும் ஏழை, எளிய பெண்களின் சொந்த நிலம் வாங்க வேண்டும் என்ற கனவை நனவாக்க, தமிழ்நாடு அரசு ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ என்ற ஒரு சிறப்பான திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினப் பெண்களை நில உரிமையாளர்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது, இத்திட்டத்திற்கு அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவே எளிமையாக விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. […]
Money 2025 1

You May Like