தொழிலாளிக்கு பணி நியமன கடிதம் & ஊதியம் தொடர்பான ரசீது வழங்க வேண்டியது கட்டாயம்…! மத்திய அரசு உத்தரவு

Central 2025

புதிய தொழிலாளர் சட்டங்கள் பீடி மற்றும் சிகரெட் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ள புதிய தொழிலாளர் சட்டங்கள் நாட்டில் உள்ள பீடி மற்றும் சிகரெட் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு ஊதியம் மற்றும் சமூகப் பாதுகாப்புப் பலன்கள் கிடைக்கவும், பணியிடங்களில் பாதுகாப்பான சூழலை உருவாக்கவும் வகை செய்கிறது. இது நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு வலுவான அடித்தளத்தை அமைக்கிறது.ஊதியச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதியத் தொகை இத்தகைய அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி அரசு நிர்ணயிக்கும் ஊதியம் அடிப்படை சம்பளமாக வழங்கப்படும். மேலும், அவர்கள் பணிபுரியும் நேரமும் வரையறை செய்யப்பட்டுள்ளது. இது அதிக நேரம் பணியாற்றுவதிலிருந்து அவர்களுக்கு ஓய்வளிக்க வகை செய்கிறது.ஒவ்வொரு தொழிலாளிக்கும் பணி நியமனக் கடிதம் வழங்குவதுடன் ஊதியம் தொடர்பான ரசீதும் வழங்கப்பட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இது செம ட்விஸ்டா இருக்கே..!! அதிமுக கூட்டணியில் இணையும் அன்புமணி..!! அதிர்ச்சியில் டாக்டர் ராமதாஸ்..!!

Thu Dec 4 , 2025
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில், பாஜகவில் நாளுக்கு நாள் உட்கட்சிப் பூசல் அதிகரித்து வருகிறது. கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே ஏற்பட்ட தலைமைப் போட்டியில், பாமக தற்போது இரண்டாகப் பிரிந்து கிடக்கிறது. கட்சியின் மூத்த நிர்வாகிகள் ராமதாஸ் பக்கமும், இளைஞர்கள் அன்புமணி பக்கமும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் நடுநிலையில் இருக்கும் தொண்டர்கள் யார் பக்கம் நிற்பது என்று தெரியாமல் […]
EPS Anbumani 2025

You May Like