தனது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது இபிஎஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.. மேலும் “ அன்று ஒரு நிலை, இன்று ஒரு நிலை என இபிஎஸ் இருப்பது வேதனை அளிக்கிறது.. ஆட்சியை நடத்த தடுமாறிய போது ஓ. பன்னீர்செல்வத்தை அழைத்து வந்தவர் இபிஎஸ் தான்..” என்று தெரிவித்தார்.. பதவி தருவதாக ஓபிஎஸ்-ஐ அழைத்து வந்து பேசிய இபிஎஸ் பிறகு கைவிட்டார்.. முன்னேற வேண்டும் என்றால் சொந்தக்காலில் முன்னேற வேண்டும்.. மற்றவர் முதுகில் ஏறி சவாரி செய்யக் கூடாது..
கோடநாட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவங்கள் குறித்து இதுவரை குரல் கொடுக்கப்படவில்லை.. எல்லாவற்றுக்கும் சிபிஐ கேட்கும் அதிமுக ஏன் இந்த சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை கேட்கவில்லை.. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை வைத்து திமுகவின் பி டீம் ஆக இருப்பவர் யார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.. நான்கரை ஆண்டுகள் ஆட்சியை நடத்த உதவிய பாஜகவிற்கு துரோகம் செய்தவர் இபிஎஸ்..
நான் யார் மீதும் கடுமையான விமர்சனங்களை நான் வைத்து இல்லை.. என்னை அழைத்து அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டுமென கூறியது பாஜக தான்.. பிரிந்து இருப்பவர்களை ஒன்றிணைக்க முயற்சி எடுக்குமாறு பாஜக தான் அறிவுறுத்தியத். பாஜக உடன் கூட்டணியை தொடர வேண்டும் என நான் உட்பட 6 பேர் இபிஎஸ் இடம் பேசினோம். ஆனால் கட்சியை இணைக்க ஆர்வம் காட்டவில்லை.. ஓபிஎஸ், டிடிவியை சந்திக்கும் நோக்கோடு தான் ஜெயந்தி விழாவுக்கு சென்றேன்.
அதிமுகவை இயக்குவதே எடப்பாடி குடும்பம் தான்.. இபிஎஸ்-ன் மகன், மாப்பிள்ளை தான் அதிமுகவை நடத்துகிறார்கள்.. கோடநாடு, கொலை கொள்ளை குற்றவாளி யார் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..” என்று தெரிவித்தார்..



