மத்திய அரசின் தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் (NMDC) உள்ள பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
பணியின் விவரங்கள்:
களப்பணியாளர் – 151
பராமரிப்பு உதவியாளர் (Elect) – 141
பராமரிப்பு உதவியாளர் (Mech) – 305
பிளாஸ்டர் கிரேடு II – 6
எலக்ட்ரீஷியன் கிரேடு III – 41
மின்னணுவியல் தொழில்நுட்ப வல்லுநர் கிரேடு III – 6
HEM மெக்கானிக் கிரேடு III – 77
HEM ஆப்ரேட்டர் கிரேடு III – 228
MCO கிரெடு III – 36
QCA கிரேடு III – 4
வயது வரம்பு: தேசிய கனிம வளர்ச்சிக் கழகத்தில் கீழ் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 14.06.2025 தேதியின் அடிப்படையில் அதிகபடியாக 30 வயது வரை இருக்கலாம். இதில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு அதிகபடியாக 5 வருடங்கள் வரையும், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 வருடங்கள் வரையும் வயது வரம்பில் தளர்வு உள்ளது.
கல்வி தகுதி:
களப்பணியாளர்: ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
பராமரிப்பு உதவியாளர்: எலெக்ட்ரிக்கல், வெல்டிங், பிட்டர், மெக்கானிஸ்ட், மோட்டார் மெக்கானிக்ஸ், மெக்கானிக், ஆட்டோ எலெட்ரிஷியன் உள்ளிட்ட பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
பிளாஸ்டர்: 10-ம் வகுப்பு/ ஐடிஐ பிளாஸ்டர் முடித்திருக்க வேண்டும். மேலும், மைனிங் மேட் சான்றிதழ் மற்றும் முதலுதவி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 3 ஆண்டு அனுபவம் தேவை.
எலக்ட்ரீஷியன்: எலெக்ரிக்கல் பொறியியலில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
மின்னணுவியல் தொழில்நுட்ப வல்லுநர்: இந்த தவிக்கு எலெக்ட்ரானிக்ஸ் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
HEM மெக்கானிக்: மெக்கானிக்கல் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
HEM ஆப்ரேட்டர்: இயந்திரவியல் பொறியியல்/ஆட்டோமொபைல் பொறியியல் டிப்ளமோ உடன் கனரக ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
MCO: மெக்கானிக்கல் பொறியியல் உடன் கனரக ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
QCA: வேதியியல்/ புவியியல் ஆகியவற்றில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் 1 ஆண்டு அனுபவம் தேவை.
சம்பளம்: பயிற்சி காலத்தில் முதல் 12 மாதங்களுக்கு மாதம் ரூ.18,000 முதல் ரூ.19,000 வரை வழங்கப்படும். அடுத்த 6 மாதங்களுக்கு மாதம் ரூ.18,500 முதல் ரூ.19,500 வரை வழங்கப்படும். அதனைத்தொடர்ந்து, அடிப்படை சம்பளம் ரூ.35,040 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://www.nmdc.co.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.
Read more: ரூ. 5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை.. ஆயுஷ்மான் கார்டை எப்படி பெறுவது..?