பள்ளி மாணவர்களுக்கு புதிய பாடப்புத்தக உருவாக்க பணி…! 26-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…!

school 2025 2

புதிய பாடப்புத்தக உருவாக்க பணியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் டிசம்பர் 26-ம் வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: பள்ளி கல்விக்கான தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை – 2025-ன்படி மேற்கொள்ளப்படவுள்ள புதிய பாடப்புத்தக உருவாக்கப் பணிகளில் தன்னார்வத்துடன் பங்கேற்க விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விருப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிப்பவர்கள், தொடர்புடைய பாடத்தில் உரிய கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும், கற்பித்தல் அனுபவம், மற்றும் கற்பித்தல் அணுகுமுறைகளில் நிபுணத்துவம், பாடப்புத்தகம், இதர புத்தக உருவாக்கப் பணிகளில் அவர்களின் பங்களிப்பு, சமர்ப்பிக்கப்படும் பாட வரைவின் மீதான மதிப்பீடு ஆகியவை ஒருங்கே பரிசீலிக்கப்பட்டு தேவைக்கேற்ப, வல்லுநர்கள் இப்பணிக் கெனத் தெரிவு செய்யப்படுவார்கள்.

தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் அடுத்தநிலை பணிக்கான தகவல் தெரிவிக்கப்படும். அதைத்தொடர்ந்து, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் பாடவாரியாகத் தெரிவிக்கப்படும் தலைப்புகளில் மாதிரிப் பாட வரைவை தயார் செய்து, டிச.26-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். பாட தலைப்பு மற்றும் மாதிரி விண்ணப்பம் உள்ளிட்ட விவரங்களை தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் www.tnschools.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

விமான ரத்துகளால் ஏற்படும் பயண இடையூறை குறைக்க 37 ரயில் கூடுதல் பெட்டி...! மத்திய அமைச்சர் அறிவிப்பு...!

Sat Dec 6 , 2025
விமான ரத்துகளால் ஏற்படும் பயண இடையூறுகளைக் குறைக்க, 37 ரயில்களில் 116 கூடுதல் பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; பரவலான விமான ரத்துகளைத் தொடர்ந்து பயணிகளின் தேவை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, இந்திய ரயில்வே, வலையமைப்பு முழுவதும் சீரான பயணம் மற்றும் போதுமான தங்குமிட வசதிகளை உறுதி செய்ய விரிவான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மொத்தம் 37 ரயில்களில் 116 […]
train

You May Like