கல்பனா சாவ்லாவின் தந்தை லால் சாவ்லா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்…!

விண்வெளி வீரர் கல்பனா சாவ்லாவின் தந்தை பனாரசி லால் சாவ்லா, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் காலமானார்.

இந்தியாவின் முதல் பெண் விண்வெளி வீராங்கனையான மறைந்த கல்பனா சாவ்லாவின் தந்தை பனாரசி லால் சாவ்லா செவ்வாய்கிழமை அதிகாலை கர்னாலில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 90. கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சாவ்லா சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது உடல் கர்னாலின் கல்பனா சாவ்லா மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண் மற்றும் விண்வெளிக்குச் சென்ற வரலாற்றில் இரண்டாவது இந்தியப் பெண் கல்பனா சாவ்லா, பிப்ரவரி 1, 2003 அன்று காலமானார். கல்பனா சாவ்லா ஹரியானாவின் கர்னாலில் பிறந்து வளர்ந்தவர். அவர் 1976 இல் கர்னாலில் உள்ள தாகூர் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார், 1982 இல் பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

அதே ஆண்டில் அவர் விண்வெளிப் பொறியியலில் முதுகலை அறிவியல் பட்டம் பெற அமெரிக்கா சென்றார். 1988 ஆம் ஆண்டு கொலராடோ பல்கலைக்கழகத்தில் இந்த பாடத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

Vignesh

Next Post

ரூ.86 கோடி பெற்று சீனாவுக்கு ஆதரவாக இந்தியாவில் நியூஸ்...! செய்தி நிறுவனர் அதிரடி கைது...!

Wed Oct 4 , 2023
டெல்லியில் உள்ள ‘நியூஸ்கிளிக்’ செய்தி நிறுவனத்திற்கு தொடர்புடைய 30க்கும் மேற்பட்ட இடங்களில் காவல்துறையினர் சோதனை நடத்திய நிலையில், அதன் நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தா என்பவறை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ‘நியூஸ்கிளிக்’ நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தா மற்றும் அமித் சக்ரவர்த்தி கைது செய்யப்பட்டுள்ளனர் . நியூஸ்கிளிக் ஆன்லைன் செய்தி நிறுவனம், அமெரிக்க பணக்காரரான நெவில்லி ராய் இடம் இருந்து பணம் பெற்றதாகவும், சீனாவுக்கு ஆதரவாக […]

You May Like