’இந்தியன் 2’ படத்திற்காக தற்போதே காரை பரிசளித்த கமல்..! யாருக்கு..? என்ன காரணம்..?

இந்தியன் 2 படத்திற்காக தன்னை தயார்படுத்திய பயிற்சியாளருக்கு ரெனால்ட் காரை பரிசாக வழங்கியுள்ளார் கமல்ஹாசன்.


கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த இந்தியன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இத்திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆன பிறகு ‘இந்தியன் 2’ படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கி வந்தார். லைகா நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிரேன் விபத்து, கொரோனா பரவல், பட்ஜெட் தொடர்பான ஷங்கருக்கும் தயாரிப்பு தரப்புக்கும் ஏற்பட்ட பிரச்சனை எனப் பல காரணங்களால் பலமுறை தள்ளிப்போனது. இந்த நிலையில், இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.

’இந்தியன் 2’ படத்திற்காக தற்போதே காரை பரிசளித்த கமல்..! யாருக்கு..? என்ன காரணம்..?

தற்போது சென்னையில் இந்தியன் – 2 திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்துக்காக கமல்ஹாசன் அதிகம் ஃபிட்னஸ் ட்ரெய்னிங் எடுத்து வந்துள்ளார். இதற்காக கமலுக்கு ஃபிட்னஸ் ட்ரெய்னர் தீவிரமாக பயிற்சி அளித்துள்ளார். இந்நிலையில், இந்தியன் 2 படத்திற்காக தன்னை தயார்படுத்திய உடற்பயிற்சியாளரை குடும்பத்தினருடன் வரவழைத்து ரெனால்ட் காரை கமல்ஹாசன் பரிசாக வழங்கியுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

’இந்தியன் 2’ படத்திற்காக தற்போதே காரை பரிசளித்த கமல்..! யாருக்கு..? என்ன காரணம்..?

ஜிம் மாஸ்டருக்கு கமல் கார் பரிசளித்த சம்பவம் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. சில மாதங்கள் முன்னர் விக்ரம் படத்தின் வெற்றிக்காக லோகேஷ் கனகராஜுக்கு விலையுயர்ந்த சொகுசு காரைரும், அவருடன் பணிபுரியும் உதவி இயக்குநர்களுக்கும் பைக் பரிசளித்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

CHELLA

Next Post

20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்த இந்திய ரூபாயின் மதிப்பு.. விவரம் இதோ..

Mon Sep 26 , 2022
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் 41 காசுகள் குறைந்து இதுவரை இல்லாத அளவாக 81.50 காசுகளாக சரிவை கண்டுள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி தொடர்ந்து 3வது முறையாக வட்டி விகிதத்தை கடந்த 21 அன்று உயர்த்தியது. இதனால் டாலருக்கு நிகரான பண மதிப்பு பல்வேறு நாடுகளில் சரிவை கண்டது. கடந்த புதன்கிழமை டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 22 […]

You May Like