மாநிலங்களவை தேர்தலுக்கு விருப்பமனு தாக்கல் செய்த திமுக, அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் தற்போது வரை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ஆகியோரும் திமுகவில் வில்சன், சண்முகம், அப்துல்லா மற்றும் அதிமுகவை சேர்ந்த சந்திரசேகரன் ஆகியோரும் மாநிலங்களவை எம்பிக்களாக உள்ளனர். இவர்களின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, காலியாகும் இந்த 6 இடங்களுக்கும் ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
அதன்படி, மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 2ஆம் தேதி தொடங்கியது. திமுக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் கடந்த 6ஆம் தேதி வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். அதேபோல், அதிமுக சார்பில் இன்பத்துரை, தனபால் ஆகியோரும் 6ஆம் தேதியன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் தான், மாநிலங்களவை தேர்தலுக்கு விருப்பமனு தாக்கல் செய்த திமுக, அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திமுக சார்பில் பி.வில்சன், சல்மா, சிவலிங்கம், கமல்ஹாசனும் அதிமுக சார்பில் தனபால், இன்பதுரை ஆகியோரும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : மாணவர்களே..!! மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!! கட்டணம் எவ்வளவு..? விவரம் உள்ளே..!!