ஒன்றரை வயது குழந்தையின் கை அகற்றம்…..! மருத்துவமனையின் அலட்சியமே காரணம் அண்ணாமலை அதிரடி ட்வீட்……!

ஒன்றரை வயது குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் மருத்துவமனை விளக்கம் கொடுத்திருப்பது ஏற்புடையதாக இல்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார்.


இது தொடர்பாக அவர் தன்னுடைய வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு வலது கை மூட்டு வரையில் பாதிக்கப்பட்டு வலது கையை வெட்டி அகற்றி இருக்கின்றனர். குழந்தைக்கு வழங்கிய தவறான சிகிச்சை தான் இதற்கு முழுக்க, முழுக்க காரணம் என்று பெற்றோர்கள் குற்றம் சுமத்தி இருக்கிறார்கள். மருத்துவமனை நிர்வாகம் கொடுத்து இருக்கின்ற விளக்கம் ஏற்புடையதாக இல்லை என்று தெரிவித்துள்ளார்.

சென்ற வருடம் நவம்பர் மாதம் 17 வயதே ஆன கால்பந்து வீராங்கனை பிரியா அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்ட தவறான சிகிச்சையின் காரணமாக, உடல்நலம் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். வசதி வாய்ப்புகள் இல்லாத ஏழை எளிய மக்களின் ஆரோக்கியத்திற்கு ஒரே நம்பிக்கையாக இருக்கும் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து, இது போன்ற சர்ச்சைகளில் சிக்குவது ஏற்புடையதல்ல என்று கூறியுள்ளார் அண்ணாமலை.

மேலும் அரசு மருத்துவமனைகளில் தொடர்ச்சியாக இது போன்ற சம்பவங்கள் நடப்பது எதேர்ச்சியானதா? அல்லது பொதுமக்களிடையே அரசு மருத்துவமனையில் தொடர்பாக அவநம்பிக்கையை விதைப்பதற்காகவா? என்ற சந்தேகம் எழுகிறது என்று தெரிவித்துள்ளார்.

உடனடியாக தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற அரசு மருத்துவமனைகளில் ஆய்வு நடத்தி பொதுமக்களுக்கு தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், தரமற்ற சிகிச்சை வழங்கி இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக பாஜக சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்றும் அவர் தன்னுடைய வலைதள பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

Next Post

முன்னணி வங்கிகள் உடன் போட்டி - ஆப்பிள்

Mon Jul 3 , 2023
உலகின் முன்னணி டெக் சேவை நிறுவனமாக இருக்கும் ஆப்பிள் (Apple Inc) சமீபத்தில் 3 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டை பெற்று முதலீட்டாளர்களையும், சக டெக் நிறுவனங்களையும் வியக்க வைத்தது. இந்த நிலையில் டிம் குக் தலைமையிலான ஆப்பிள் தனது வர்த்தகத்தையும், வாடிக்கையாளர்களையும் அதிகரிக்க பல முயற்சிகளில் இறங்கியுள்ளது.   ஆப்பிள் தற்போது இந்தியாவை தனது முக்கிய வர்த்தக இலக்காக மாற்றியுள்ள காரணத்தால் இந்தியாவில் தயாரிக்கப்படும் போன், லேப்டாப் என […]
china apple

You May Like