கரூர் சம்பவம்… தவெகவின் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமாருக்கு சிபிஐ சம்மன்…!

TVK ct nirmal 2025

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன்.


கரூர் வேலுசாமிபுரத்தில் செப். 27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ விசாரித்து வருகிறது. முன்னதாக, கடந்த 17-ம் தேதி கரூர் வந்த சிபிஐ குழுவிடம், கரூர் டவுன் போலீஸார் மற்றும் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினர் ஆவணங்களை ஒப்படைத்தனர்.

இதையடுத்து, சிபிஐ குழுவைச் சேர்ந்த ஆய்வாளர் மனோகரன், கரூர் குற்றவியல் நீதிமன்றம் 2-ல் நீதிபதி சார்லஸ் ஆல்பர்ட் முன்னிலையில் முதல்தகவல் அறிக்கையை கடந்த 22-ம் தேதி தாக்கல் செய்தார். அதில், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.மதியழகன், பொதுச் செயலாளர் ஆனந்த், இணைச் செயலாளர் நிர்மல்குமார் மற்றும் தவெகவினர் பலர் என குறிப்பிட்டு, விசாரணையைத் தொடர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் குற்றவியல் நீதிமன்றம் 1-ல் சிபிஐ தாக்கல் செய்துள்ள எஃப்ஐஆரின் நகலைக் கேட்டு தவெக வழக்கறிஞர்கள் நேற்று மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து, சிபிஐ தாக்கல் செய்த எஃப்ஐஆரின் நகல் அவர்களிடம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன். நாளை மறுநாள் கரூர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளிக்க இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

கோயிலில் பூசாரி, பக்தர்கள் சாமி ஆடுவது உண்மையா..? நல்ல சக்தி எது..? கெட்ட சக்தி எது..? பலருக்கும் தெரியாத தகவல்..!!

Mon Oct 27 , 2025
இந்த உலகம் நம்பிக்கை மற்றும் நாத்திகம் என்ற இரண்டு துருவங்களில் இயங்குகிறது. இறைவன் இருக்கிறாரா இல்லையா என்ற விவாதம் ஒருபுறம் நடந்தாலும், கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி நம்மை விடவும், நாம் நினைப்பதை விடவும் பிரபஞ்சத்தில் இயங்குகிறது என நம்புபவர்களே அதிகம். இந்த நம்பிக்கையின் முக்கிய அங்கம் தான் ‘சாமி ஆடுதல்’ மற்றும் ‘அருள்வாக்கு’ கூறுவது. இறைநம்பிக்கை அற்றவர்கள் இதை மோசடி என்றும், ஆதாயத்துக்காக ஏமாற்றுவதாகவும் விமர்சிப்பதுண்டு. இந்தச் சூழலில், […]
Temple 2025

You May Like