Flash : கரூர் துயரம்.. அரசியல் நோக்கோடு குற்றம் சாட்ட வேண்டாம்.. முழு உண்மையும் வெளிவரும்.. முதல்வர் ஸ்டாலின் உறுதி..

tamilnadu cm mk stalin

கரூர் துயரம் தொடர்பாக அர்ரசியல் நோக்கோடு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் ஒரு நீண்டகாலத் தீர்வை நோக்கிப் பயணிப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

கடந்த சனிக்கிழமை கரூரில் விஜய் நடத்திய பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கி உள்ளது.. இதுகுறித்து ஒரு நபர் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.. ஆனால் இது திட்டமிட்ட சதி என்று தவெகவினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில் நேற்று சென்னை உயர்நீதிமன்றம் கரூரில் நடந்தது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு என்று கடுமையாக சாடியது.. மேலும் பொறுப்பற்ற முறையில் செயல்பட்ட தவெக தலைவர் மற்றும் கட்சியினருக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்திருந்தது.. அதுமட்டுமின்றி இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவையும் உயர்நீதிமன்றம் அமைத்து உத்தரவிட்டது..


இந்த நிலையில் கரூர் துயரம் தொடர்பாக அர்ரசியல் நோக்கோடு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் ஒரு நீண்டகாலத் தீர்வை நோக்கிப் பயணிப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்“ கரூர் துயரம் குறித்து மாண்பமை உயர்நீதிமன்றம் கூறியுள்ள கருத்துகள், வழிகாட்டுதல்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு மிகத் தீவிரமாக கவனத்தில் கொண்டு செயலாற்றி வருகிறது. கரூரில் நடந்த துயரத்தால் நாம் அனைவருமே நெஞ்சம் கலங்கிப் போயிருக்கிறோம். தம் அன்புக்குரியோரை இழந்து தவிக்கும் ஒவ்வொரு குடும்பத்தின் கண்ணீரையும் கண்டு தவிக்கிறேன். மாண்பமை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) தனது விசாரணையைத் தொடங்கும். இதன் மூலம், முழு உண்மையையும் வெளிக்கொண்டு வருவோம் என்று மாநிலத்தின் முதலமைச்சராக மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்.

அனைத்து மட்டங்களிலும் பொறுப்பு உறுதிசெய்யப்படும். பலவற்றிலும் இந்தியாவுக்கே முன்னோடியான தமிழ்நாடு, கூட்ட நெரிசல் விபத்துகளைத் தவிர்ப்பதிலும் நாட்டுக்கு வழிகாட்டும். மாநிலம் முழுவதும் துறைசார் வல்லுநர்கள், அரசியல் கட்சியினர், செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என அனைவரோடும் கலந்தாலோசித்து ஒரு முழுமையான ‘நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) வடிவமைப்போம்.

தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவும் பின்பற்றத்தக்க மாடலாக இது அமையும். துடைக்க முடியாத இந்தத் துயரச் சம்பவத்தின் பின்னணியில் அரசியல் நோக்கோடு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் ஒரு நீண்டகாலத் தீர்வை நோக்கிப் பயணிப்போம். இந்தக் கூட்டு முயற்சியில் அனைவரது யோசனைகள், ஆலோசனைகளையும் வரவேற்கிறேன். ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பில்லாதது. நம் மக்களின் இன்னுயிரைக் காக்கவும், இனி இப்படி ஒரு பெருந்துயரம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் எங்குமே நிகழாமல் தடுக்கவும் ஒன்றிணைவோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்..

Read More : Big News : விஜய்க்கு அடுத்த ஆப்பு.. பிரச்சார பேருந்தை பறிமுதல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.. CCTV காட்சிகளையும் பறிமுதல் செய்ய ஆணை!

English Summary

Chief Minister Stalin has advised that we move towards a long-term solution to the Karur tragedy without blaming each other for political reasons.

RUPA

Next Post

உங்க குழந்தைகள் குட்டையாக இருக்கிறார்களா? இந்தக் காய்கறிகளை கொடுத்தா உயரமாக வளருவார்கள்!

Sat Oct 4 , 2025
Experts say that some vegetables can help increase children's height. Let's see what they are now.
13 Foods That Increase Height In Teenagers To Maximise Growth Potential 02adc79e7b 1

You May Like