கடல்நீரில் மிதக்கும் கேரளா!… சுனாமிபோல் பல அடி உயரத்துக்கு எழுந்த அலை!… அச்சத்தில் மக்கள்!

Kerala: கடல் சீற்றம் காரணமாக கேரளாவில் வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்ததில் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கடல் சூழ்ந்த மாநிலமான கேரளாவில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 31) அதிர்ச்சிகரமான சம்பவம் நடைபெற்றது. ஒட்டுமொத்த கடலும் திடீரென மிகவும் ஆக்ரோஷமாக கொந்தளித்து, பல அடி உயரத்துக்கு அலைகள் எழும்பியது. அமைதியாக இருந்த கடல், திடீரென பயங்கர சத்தத்துடன் கொந்தளிப்பதை பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து கடல்நீர் ஊருக்குள் புகுந்தது. இதில் பல வீடுகள் சேதமடைந்தன. திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, திருச்சூர், கோழிக்கோடு, கொச்சி, கண்ணூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடல் நீர் இதுபோல ஊர்களுக்குள் புகுந்ததால் மக்கள் அச்சமடைந்தனர். இதுதவிர, பல பகுதிகளில் கடல் பல கிலோமீட்டருக்கு உள்வாங்கியதும் பீதீயை ஏற்படுத்தியது. இதையடுத்து, இதுதொடர்பாக வானிலை மையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டது.

அதில், பனிமலைகள் சூழ்ந்த மனிதர்களே இல்லாத அண்டார்டிகா துருவப் பகுதியில் உள்ள கடல்களில் மிக மிக சக்திவாய்ந்த புயல் ஏற்பட்டிருப்பதாகவும், அந்தத் தாக்கத்தின் காரணமாகவே கேரளாவில் உள்ள கடல்களில் கொந்தளிப்பு ஏற்பட்டு தண்ணீர் ஊருக்குள் வந்தததாகவும் தெரிவித்தது. இதனிடையே, அண்டார்டிகாவில் புயல் அடங்கவில்லை என்பதால் இவ்வாறு கடல் கொந்தளிப்பு தொடரும் என்றும், பல இடங்களில் கடல் நீர் மிக வேகமாக ஊருக்குள் வரும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Readmore: மாணவி மரணம் எதிரொலி!… ஆன்லைனில் மோசமான கேக்கை எவ்வாறு கண்டறிவது?

Kokila

Next Post

RIP | ஜென்டில்மேன், சந்திரமுகி உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதிய ஸ்ரீ பாலகிருஷ்ணா காலமானார்..!!

Tue Apr 2 , 2024
பிரபல டப்பிங் வசனகர்த்தா ஸ்ரீ ராமகிருஷ்ணா உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 74. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இவர், 50 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் குடியேறினார். ஜென்டில்மேன், சந்திரமுகி என 300-க்கும் மேற்பட்ட படங்களுக்கு (தமிழ் – தெலுங்கு) மொழிபெயர்ப்பாளராக பணியாற்றியுள்ளார். மணிரத்னம், ஷங்கரின் அனைத்து படங்களுக்கும் வசனம் எழுதிய இவர், கடைசியாக ரஜினியின் தர்பார் படத்திற்கு வசனம் எழுதினார். Read More : ’செத்த மொழிக்கு […]

You May Like