கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு… முக்கிய நபரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை…

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட், பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது.

இது தொடர்பான வழக்கு ஊட்டி மாவட்ட கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கினை தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுவரை 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் வைத்து சயான், மனோஜிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய சந்தோஷ் சாமி என்பவரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் முடிவு செய்தனர். அதன்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இதையடுத்து சந்தோஷ் சாமி இன்று காலை கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி ஏ.டி.எஸ்.பி. முருகவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

அவரிடம் கொடநாடு எஸ்டேட்டில் சம்பவத்தன்று என்ன நடந்தது. அங்கு என்னென்ன பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. யாரெல்லாம் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது? யார் சொல்லி அங்கு சென்றனர்? என பல கேள்விகளை கேட்டு சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்தனர்.

Baskar

Next Post

தேர்தல் விதிகளை மீறிய பாஜக..!! என்ன இப்படி பண்ணிட்டாங்க..!! திமுக பரபரப்பு புகார்..!!

Tue Mar 26 , 2024
இணையதளத்தில் விளம்பரம் வெளியிட்டு பரிசு அறிவித்துள்ள பாஜக மீது நடவடிக்கை கோரி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு திமுக புகார் கடிதம் எழுதியுள்ளது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு புகார் கடிதம் எழுதியுள்ளார். அந்த புகாரில், ‘போல் சர்வே.டாப்’ என்ற இணையதளத்தில் பாஜ விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதற்கு, பாஜக தேர்தல் போனஸ் என்று தலைப்பிடப்பட்டுள்ளது. அந்த விளம்பரத்தில் உள்ள கேள்விகளுக்கு பதிலளித்தால் ரூ.5 ஆயிரம் […]

You May Like