மாற்றுத்திறனாளியை நெகிழ வைத்த KPY பாலா..!! கண்ணீர் மல்க நன்றி..!!

விஜய் டிவியில் இப்போதெல்லாம் எந்த ஒரு நிகழ்ச்சியை எடுத்தாலும், பாலா அதில் கண்டிப்பாக இருப்பார். அந்த அளவிற்கு தனது ரைமிங் காமெடிகள் மூலம் மக்களை வெகுவாக கவர்ந்து விட்டார். டிவி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, தனியார் மற்றும் வெளிநாட்டு நிகழ்ச்சிகளிலும், கலந்து கொண்டு தனது திறமையை வெளிக்காட்டி வருகிறார். மிகவும் திறமையாக வளர்ந்து வரும் நடிகரான பாலா தான் சம்பாதித்த பணத்தை இயலாதவர்களுக்கும், முடியாதவர்களுக்கு உதவிகள் செய்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன்னர் கூட ஈரோடு மாவட்டம் கடம்புறை அடுத்து குன்றி உட்பட 18 மலை கிராமத்தில் சுமார் 8,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக பல கிலோமீட்டர் தாண்டி வந்து தான் சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலையில் இருந்தது. மக்களின் மருத்துவ அவசர உதவி காலத்தில் பயன்படும் வகையில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான இலவச ஆம்புலன்ஸை வழங்கி உள்ளார் பாலா. இதை அவர் தனது சொந்த பணத்தின் மூலமாக வழங்கினார்.

பாலாவின் இந்த செயலை பலரும் பாராட்டினர். இதையடுத்து, மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 1,000 ரூபாய் என்ற வீதத்தில் 200 குடும்பங்களுக்கு மொத்தம் 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். தொடர்ந்து பாலாவின் உதவும் குணம் பலரை வியக்க வைத்து வருகிறது. இந்நிலையில் தற்போது மாற்றுத்திறனாளிக்கு இருசக்கர வாகனம் ஒன்றை சர்ப்ரைஸ் ஆக பரிசளித்து அவரை ஆனந்த கண்ணீரில் முழ்கடித்துள்ளார்.

அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பாலா, ”MCA முடித்த பட்டதாரி வாகனம் இல்லாததால் வேலைக்குச் செல்ல முடியாமல் இருக்கிறார். அதனால் என்னால முடிஞ்சது” என கேப்ஷன் கொடுத்து பதிவிட்டுள்ளார். இந்த எமோஷ்னல் வீடியோ இணையத்தில் வைரலாக பாலாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

English Summary : KPY Bala bought a two-wheeler for a disabled person

Read More : Warning | ”கங்கை நீரில் யாரும் குளிக்காதீங்க”..!! தேசிய பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை..!!

Chella

Next Post

TN Police | ஹெல்மெட், சீட் பெல்ட்..!! இனி போலீசார் மீதும் வழக்குப்பதிவு..!! வெளியான அதிரடி உத்தரவு..!!

Thu Feb 29 , 2024
ஹெல்மெட் அணியாமலும், காரில் சீட் பெல்ட் அணியாமலும் சென்று போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் போலீசார் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது போலீசார் அபராதம் விதிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுகிறது. அதேபோல் காரில் சீட் பெல்ட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளிடம் […]

You May Like