ஒட்டபிடாரத்தில் களம் இறங்கும் கிருஷ்ணசாமி.. புதிய தமிழகம் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

krishnaswamy 2025

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியிலும் எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணியிலும் தொகுதிப் பங்கீடு நிறைவடைந்துவிட்டது. போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டு வருகிறது.


அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டது. இம்முறை, அதிமுகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத சூழலில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். 

அதனைதொடர்ந்து புதிய தமிழகம் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியளை அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டார். 60 முதல் 70 தொகுதிகள் வரை போட்டியிட முடிவு செய்யப்பட்ட நிலையில், முதற்கட்டமாக 43 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஒட்டப்பிடாரத்தில் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் நெல்லை தொகுதிகளில் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார்.

Read more: தூத்துக்குடி தொகுதியை நண்பருக்கு தூக்கி கொடுத்த விஜய்.. அப்செட்டில் தவெக நிர்வாகி அஜிதா!

English Summary

Krishnasamy contesting from Ottapidaram.. Puthiya Tamil Nadu Party’s first phase candidate list released!

Next Post

கிணற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்ற மாணவன் சடலமாக மீட்பு.. நீச்சல் தெரிந்தும் விபரீதம்! என்ன நடந்தது..?

Sun Mar 29 , 2026
A student who went to bathe with friends in a well near Trichy was found dead.
death n

You May Like