கோவை விமான நிலையத்தில் ‘டிஜி யாத்ரா’ திட்டம் அறிமுகம்!

கோவை விமான நிலையத்தில் ‘டிஜி யாத்ரா’ திட்டம் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தொடங்கப்பட உள்ளது. 

விமான பயணிகளின் வசதிக்காக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் சார்பில் ‘டிஜி யாத்ரா’ வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இந்த திட்டம் டெல்லி, பெங்களூரு, வாரணாசி, ஹைதராபாத், கொல்கத்தா, விஜயவாடா, புனே, மும்பை, கொச்சி, அகமதாபாத், லக்னோ, ஜெய்ப்பூர், கவுஹாத்தி விமான நிலையங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து தற்போது கோவை விமான நிலையத்தில் விரைவில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது.

இது குறித்து கோவை விமான நிலைய இயக்குநர் செந்தில் வளவன் கூறியதாவது: பொதுவாக பயணிகள் ‘போர்டிங் பாஸ்’ பெற விமான நிலைய வளாகத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கும். இதுபோன்ற நடவடிக்கைகளை எளிதாக்கவும், டிஜிட்டல்மயமாக்கும் நோக்கத்திலும் மத்திய சிவில் விமான போக்கு வரத்து அமைச்சகம் சார்பில் ‘டிஜி யாத்ரா’ என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் இதை பதிவிறக்கம் செய்து, ஆதார் உள்ளிட்ட தங்களின் பயண விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

இதன் மூலம் விமான நிலைய நுழைவுவாயில் முதல் விமானம் ஏறும் பகுதி வரை வரிசையில் அதிக நேரம் காத்திருக்காமல் செல்ல முடியும். பாதுகாப்பு காரணங்களுக்காக மேற்கொள்ளப்படும் தனிநபர் மற்றும் உடைமை சோதனைகளை மட்டும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உடைமைகள் எதுவும் இல்லையெனில் நேராக உள்ளே செல்ல முடியும். வேகமாகவும், பேப்பர் பயன்பாடு இல்லாமலும் பயணிகளுக்கு வசதி ஏற்படுத்தி தருவதே இத்திட்டத்தின் நோக்கம் எனக் கூறினார்

Next Post

மீண்டும் ரத்தான அமித்ஷாவின் தமிழ்நாடு பயணம்.. காரணம் என்ன?

Thu Apr 4 , 2024
மத்திய அமைச்சர் அமித் ஷா-விற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் 2 நாள் தமிழ்நாடு சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தேசிய தலைவர்களும் தீவிர சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  தேர்தல் நெருங்கியது முதலே பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு 5 முறை வந்து பிரசாரத்தில் ஈடுப்பட்ட நிலையில் மீண்டும் வருகிற 9ம் […]

You May Like