ஆந்திர கிராமங்களில் அதிர்ச்சி..! கிணறு, குழாய்களில் கொதிக்கும் வெந்நீர்..! குடிநீருக்காக மக்கள் அவதி..!

Waters Hidden Secret 1

ஆந்திர மாநிலத்தில் உள்ள பத்ராத்திரி கோத்தகுடேம் மாவட்டம், மாணு குரு, பாகிடேறு கொல்ல கோட்டூர் ஆகிய 3 கிராமங்களில் கிணறுகள் மற்றும் வீடுகளுக்கு வரும் குடிநீர் குழாய்களில் இருந்து திடீரென சூடான நீர் வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.


வழக்கமாக குடிநீருக்காக பயன்படுத்தப்படும் கிணறு மற்றும் குழாய் நீர் தற்போது மிகவும் சூடாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அன்றாட தேவைகளுக்குக்கூட அந்த நீரை உடனடியாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பாக குடிநீரை பயன்படுத்துவதற்கு முன்பு, அதனை குளிரவைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சூடாக வரும் நீரை சிறிது நேரம் ஆறவைத்த பின்னரே மக்கள் குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். இந்த வினோதமான நிகழ்வு அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் இந்தப் பகுதிகளில் நிலத்திற்கு அடியில் நிலக்கரி சுரங்கம் இருப்பதால் அதிலிருந்து வெளியேறும் வெப்பம் காரணமாக இந்த வகையான சூடான நீரவியாக வரலாம் எனவும்,மேலும் திடீரென நீர் சூடாக வருவதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் ஆதாரங்களில் இருந்து சூடான நீர் வருவதால், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read:மத்திய பிரதேச வருவாய் அதிகாரி சஸ்பெண்ட்..! காலணிகள் நனையாமல் இருக்க முதியவரின் முதுகில் ஏறி சென்றதால் அதிரடி நடவடிக்கை..!

maha

Next Post

பாக்கெட் உணவு லேபிள் எப்போ வரும்? குழந்தைகளுக்கு எப்படி புரிய வைப்பது?. FSSAI-க்கு உச்ச நீதிமன்றம் எழுப்பிய 13 மிரட்டலான கேள்விகள்!

Sat Sep 12 , 2026
பாக்கெட் உணவுப் பொருட்களில் ‘சிவப்பு அறுகோண’ (Red Hexagon) எச்சரிக்கை லேபிள்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு மற்றும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திற்கு (FSSAI) உச்ச நீதிமன்றம் 13 முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது. பொதுமக்களின் ஆரோக்கியம், குறிப்பாக வளரும் குழந்தைகளின் நலனைக் கருத்திற்கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், இது குறித்த விளக்கங்களை 10 நாட்களுக்குள் பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்யுமாறு FSSAI-க்கு உத்தரவிட்டுள்ள உச்ச […]
supreme court 080520370 16x9 1 1

You May Like