’இனி சீக்கிரமா போகலாம்’..!! ரயிலின் வேகம் அதிகரிப்பு..!! எந்த வழித்தடத்தில் தெரியுமா..?

சேலம் – விருத்தாசலம் இடையே இரு மார்க்கத்திலும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாளை மறுநாள் (சனிக்கிழமை) முதல் இந்த ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பயண நேரம் 15 நிமிடமாக குறையும். அதன்படி, விருத்தாசலம் – சேலம் பயணிகள் ரயில் (06121) விருத்தாசலத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு காலை 9.05 மணிக்கு சேலம் வந்தடையும். சேலம் – விருத்தாசலம் பயணிகள் ரயில் (06122) சேலத்தில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு விருத்தாசலம் சென்றடையும்.


இதேபோல் சேலம் – விருத்தாசலம் பயணிகள் ரயில் (06896) சேலத்தில் இருந்து காலை 10.10 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.10 மணிக்கு விருத்தாசலம் சென்றடையும். விருத்தாசலம் – சேலம் பயணிகள் ரயில் (06895) விருத்தாசலத்தில் இருந்து மதியம் 2.05 மணிக்கு புறப்பட்டு மாலை 5.05 மணிக்கு சேலம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CHELLA

Next Post

சாய் காயத்ரி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து வெளியேறுவதற்கான காரணம் என்ன…..? உண்மையை போட்டு உடைத்த பிரபலம்…..!

Thu Mar 30 , 2023
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஒரு தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரின் கதைக்களம் அண்ணன், தம்பி பாசம், கூட்டுக் குடும்ப பிணைப்பு என்று சென்றுகொண்டு இருக்கிறது. தற்போது அண்ணன் தம்பிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக, இருவர் அந்த குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று விட்டனர். இந்த நிலையில், மூர்த்தி உள்ளிட்ட இருவர் மட்டும் ஒன்றாக இருக்கிறார்கள். எப்படியாவது சமாதானம் பேசி வீட்டை விட்டு சென்ற […]
saai gathri

You May Like