Lok Sabha | ’இனி யாரும் ஓட்டு போட முடியாது’..!! தபால் வாக்கு நிறைவு..!! நாளை ஓய்கிறது பிரச்சாரம்..!!

இன்றுடன் தபால் வாக்கு செலுத்தும் பணி நிறைவடைந்த நிலையில், நாளையுடன் பிரச்சாரம் ஓய்வு பெறுகிறது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், முதல் கட்டமாக வரும் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி அன்றைய தினமே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், தேர்தல் ஆணையமும் பல்வேறு முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, பூத் சிலிப் விநியோகம், தபால் வாக்கு பெறும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு செலுத்தும் பனி இன்றுடன் நிறைவு பெற்றது. இதுபோன்று தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் தபால் வாக்கு செலுத்த இன்றே கடைசி நாளாகும்.

அதேபோல் தமிழகத்தில் மக்களவை தேர்தலை முன்னிட்டு அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில், நாளை மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை ஓய்வு பெறுகிறது. இதனால் இன்றும், நாளையும் தமிழக தேர்தல் களம் அனல் பறக்க காணப்படும். மேலும், தமிழ்நாட்டில் கடந்த ஒருவாரமாக நடைபெற்று வந்த பூத் சிலிப் வழங்கும் பணியும் நிறைவு பெற்றது.

Read More : நண்பன் மறைவு..!! மனமுடைந்துபோன ரஜினி..!! என்ன சொல்லியிருக்காரு தெரியுமா..?

Chella

Next Post

ஓடும் ரயிலில் பதுங்கி இருந்த பாம்பு! பயணியை கடித்ததால் பரபரப்பு!

Tue Apr 16 , 2024
மதுரை – குருவாயூர் பயணிகள் விரைவு ரயிலில் மதுரையைச் சேர்ந்த பயணி ஒருவரை பாம்பு கடித்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மதுரை குருவாயூர் இடையே தினசரி விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது இந்த ரயில் தினமும் காலை 11:20 க்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 2.10 மணிக்கு குருவாயூரை சென்றடைகிறது. அதன் பிறகு காலை அங்கிருந்து புறப்படும் குருவாயூர் மதுரை எக்ஸ்பிரஸ், அன்று இரவே மதுரை வந்துவிடும். இந்நிலையில், […]

You May Like