அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை…! ஆகஸ்ட் 2-ம் தேதி வரை மழை… வானிலை மையம் எச்சரிக்கை…!

rain 1

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் ஆகஸ்ட் 2-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

குஜராத் – வடக்கு கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. மேலும், தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் 31-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக் கூடும். ஆகஸ்ட் 1, 2-ம் தேதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


சென்னை மற்றும் புறநகரில் ஒருசில பகுதிகளில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்திய மேற்கு, அதனை ஒட்டிய தென்மேற்கு மற்றும் மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், தெற்கு மத்திய-வடக்கு வங்கக்கடலின் அநேக பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நாளை மத்திய வங்கக்கடலின் சில பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், ஆந்திர கடலோரப்பகுதிகள், தெற்கு- மத்திய வடக்கு வங்கக்கடலின் அநேக பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

Holiday: இரண்டு மாவட்டத்தில் இன்று பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை...!

Mon Jul 28 , 2025
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் ஆடிப்பூரம் விழாவையொட்டி இன்று செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டத்தையொட்டி விருதுநகர் மாவட்டத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த இரு மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு அலுவலகங்கள் இன்று இயங்காது. செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழா 26-ம் தேதி சனிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி 26-ம் […]
holidays 2025

You May Like