தமிழகமே..! வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி… 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்…!

cyclone rain 2025

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து செல்லக் கூடும். இதன் காரணமாக இன்று தமிழக கடலோரப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் சில இடங்களிலும், 19-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 20-ம் தேதி ஓரிரு இடங்களிலும், 21, 22-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்யக் கூடும் இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழையும், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான முதல் கன மழையும் பெய்யக் கூடும். தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை.

Vignesh

Next Post

வன்னியர் இடஒதுக்கீடு... டிசம்பர் 17-ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம்...! அன்புமணி ராமதாஸ் அதிரடி...!

Mon Nov 17 , 2025
வன்னியர் இடஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்றும் அளவுக்கு டிசம்பர் 17-ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் அமைய வேண்டும் என்று பாமக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்; நமக்கே உரித்தான கற்களும், முட்களும் நிறைந்த சமூகநீதியை நோக்கிய இன்னொரு போராட்டப் பாதையில் பயணத்தை தொடங்கியிருக்கிறோம். தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு குறைந்தது 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் […]
3161612 anbumaniramadoss 1

You May Like