திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகே புல்லரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 25 வயது பெண் மோனிகா. ஆகாஷ் என்பவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை, இருவரும் திருவள்ளூர் பகுதியில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளனர்.
கோடை வெயில் மற்றும் புழுக்கம் காரணமாக, மோனிகா தனது கணவரிடம் ஏசி வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால், பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக ஆகாஷ் அதற்கு மறுப்புத் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் தம்பதியினரிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
சனிக்கிழமை இரவு, வெப்பம் அதிகமாக இருந்ததால் ஆகாஷும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் வீட்டின் மொட்டை மாடியில் உறங்கியுள்ளனர். மோனிகா மட்டும் அறையில் இருந்திருக்கிறார். நேற்று காலை ஆகாஷ் அறைக்குச் சென்று பார்த்தபோது, மோனிகா உயிரிழந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் போலீசார் இந்தச் சம்பவத்தை இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மோனிகாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மோனிகாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவருடைய பெற்றோர் புகார் அளித்திருக்கிறார்கள்.
Read more: தண்ணீர் தொட்டிகள் ஏன் உயரத்தில் கட்டப்படுகிறது தெரியுமா..? பலருக்கு தெரியாத தகவல்..!



