Madras Eye: கொளுத்தும் வெயில்…! அதிகரிக்கும் கண் நோய்…! பாதுகாப்பது எப்படி ?

கோடை வெயில் கொளுத்தும் நிலையில் கண் நோய் பாதிப்புகளும் தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் கோடை வெயில் தலையெடுக்க தொடங்கி விட்டது.நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.பொதுமக்கள் வெளியில் சென்று வருவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. அதிலும் வாகன ஓட்டிகள் மிகவும் மோசம்.இந்த வெயிலினால் கோடை கால நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

வெப்ப அலை: அதிகப்படியான வெப்பம் காரணமாக நம் உடலில் வெப்ப நிலை அதிகரித்து உடலில் இருக்கும் நீர் உறிஞ்சப்படுகிறது. இதனால் உடனே உடலில் சோர்வு ஏற்பட்டு விடுகிறது. வீட்டினுள் பேன் ஓடிக்கொண்டு இருந்தாலும் வெப்ப அலைகளையே உணர முடிகிறது.

கண் நோய் பாதிப்பு: இந்த நிலையில் கொளுத்தும் வெயிலால் கோடை காலத்தில் ஏற்படும் கண் நோய்களும் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக கண் அழற்சியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை தமிழகம் முழுவதும் அதிகரித்து காணப்படுகிறது.சென்னையிலும் கண் அழற்சி பாதிப்பு அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இளம் சிவப்பு கண் நோய் எனப்படும் கண் அழற்சி பாதிப்புகள் தற்போது அதிகரித்து வருகிறது. கண் இமைக்கு உள்ளே அமைந்திருக்கும் திசுவில் வீக்கம் அல்லது அழற்சி ஏற்படும்போது கண் அழற்சி பாதிப்பு உருவாகிறது.

கண் நோய் பாதிப்பை தவிர்ப்பது : அசுத்தமான கைகளால் கண்களை தொடுவதை தவிர்க்க வேண்டும். சூரியனிலிருந்து வரும் புறஊதா கதிர்வீச்சு பல கண் நோய்களை விளைவிக்கும் என்பதால் இதில் இருந்து தற்காத்து கொள்ள சூரிய ஒளியிலிருந்து கண்களைக் காக்கும் கண்ணாடிகளை வெளியில் செல்லும் போது அணிந்து கொள்வது நல்லது . உடலில் உள்ள நீர்ச்சத்து .குறையாமல் பாதுகாக்கும் இளநீர், நுங்கு போன்ற இயற்கை பானங்களை அருந்தலாம். செல்போன்கள், கம்ப்யூட்டர் திரைகளை தொடர்ந்து பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

Also Read: விரத முறைகளால் மாரடைப்பு ஏற்படுகிறதா?… இனி பயமில்லை!… ஆய்வுகளுக்கு விளக்கமளித்த மருத்துவர்!

Maha

Next Post

அலர்ட்! உடல் எடை திடீர் அதிகரிப்பு அல்லது இழப்பு, இந்த நோயின் அறிகுறியா….!

Tue Apr 2 , 2024
உங்கள் எடை தொடர்ந்து அதிகரித்தாலோ அல்லது குறைந்து கொண்டே இருந்தாலோ, அது உங்களுக்கு எச்சரிக்கை மணியாக இருக்கலாம், ஏனெனில் இது தைராய்டு நோயின் அறிகுறியாக இருக்கலாம். தைராய்டு பிரச்சனை என்பது தற்போது பொதுவானது, பெரும்பாலான மக்கள் தங்கள் மோசமான வாழ்க்கை முறையால் தைராய்டு நோய்க்கு இரையாகி வருகின்றனர்.தைராய்டு நோயின் அறிகுறிகள் முன்னதாகவே தெரிவதில்லை. நோயின் பிடியில் இருக்கும்போது மட்டுமே அதைப் பற்றி அறிந்து கொள்வார்கள். தைராய்டைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினதல்ல, […]

You May Like