“வெல்டன் தமிழக அரசு.” அந்த விஷயத்தில் டாஸ்மாக் ஐடியாவை பாராட்டிய நீதிமன்றம்.!

தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள ஒரு திட்டத்திற்கு  சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டுகளை தெரிவித்து இருக்கிறது. தமிழகத்தில் மதுபான கடைகள் மாநில அரசால் நடத்தப்பட்டு வருவது நாம் அறிந்ததே.


தற்போது மலைவாழ் பிரதேசங்களில் இருக்கும்  மதுக்கடைகளில் மதுப்பிரியர்கள் குடித்த பாட்டிலை திரும்ப கொடுத்தால் அவர்களுக்கு தேவையான மது பாட்டில் வாங்கும் போது பத்து ரூபாயை தள்ளுபடி செய்துவிட்டு புதிய பாட்டிலை கொடுக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த திட்டமானது ஆரம்பத்தில்  பெரியளவு உதவவில்லை என்றாலும் கூட தற்போது இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கு இந்தத் திட்டமானது உதவியாக இருந்திருக்கிறது.

இதனால் தொலைநோக்குப் பார்வையுடன் இந்தத் திட்டத்தை செயல்படுத்திய தமிழக அரசுக்கு  உயர் நீதிமன்றம் பாராட்டுகளை தெரிவித்து இருக்கிறது. இந்தத் திட்டமானது  வருகின்ற ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கோயம்புத்தூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களிலும்   செயல்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

இந்தத் திட்டங்களின் மூலம் மது பாட்டில்களை மீண்டும்  மறுசுழற்சி முறையில் பயன்படுத்த முடியும். மேலும் மது பாட்டில்களை மதுப்பிரியர்கள் டாஸமாக்கிலேயே திரும்ப கொடுப்பதால் பாட்டில்கள் சாலை மற்றும் தெருக்களில் உடைந்து பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுவது  தடுக்கப்படுவதோடு இயற்கை சூழலும் மாசுபடாமல்  பாதுகாக்கப்படுகிறது.

1newsnationuser5

Next Post

ஷாக்...! பிப்ரவரி 1 2023 முதல் வாகனங்களின் 1.2% வரை உயரும்...! பிரபல நிறுவனம் அறிவிப்பு...!

Sat Jan 28 , 2023
வாகனங்களின் விலைகளை சராசரியாக 1.2% உயர்த்துவதாக டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ், பிப்ரவரி 1, 2023 முதல் மொத்த உள்ளீடு செலவுகள் அதிகரித்து வருவதால், அதன் பயணிகள் வாகனங்களின் விலைகளை சராசரியாக 1.2% உயர்த்துவதாக தெரிவித்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், டாடா மோட்டார்ஸ் அதிகரித்த செலவினங்களில் கணிசமான பகுதியை உள்வாங்கிக் கொண்டது, ஆனால் ஒட்டுமொத்த உள்ளீடு செலவுகளின் செங்குத்தான உயர்வு, இந்த குறைந்தபட்ச விலை […]
e bike

You May Like