மனிதர்களை நிர்வாணமாகப் பார்த்து எதிர்காலத்தைக் கணிக்கக்கூடிய “மேஜிக் கண்ணாடி”..! முதியவரிடம் 9 லட்சம் சுருட்டிய கும்பல்..

மூன்று முகம் படத்தில் ரஜினி ஒரு Xray கிளாஸ் பயன்படுத்துவார், அதில் பார்த்தால் எதிரில் இருக்கும் நபர்கள் நிர்வாணமாய் காணப்படுவார்கள் என்று காட்சி அமைந்திருக்கும், அது போல ஒரு சம்பவம் தற்போது நடந்துள்ளது, படத்தில் காண்பிக்கப்பட்டது மூக்கு கண்ணடி, இப்பொது முகாம் பார்க்கும் காண்ணாடி அவ்ளோதான் வித்தியாசம். இதை வைத்து முதியவர் ஒருவரிடமிருந்து 9 லட்சம் ரூபாய் ஏமாற்றியுள்ளது ஒரு கும்பல்.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் அவினாஷ் குமார் சுக்லா, வயது 72. இவரிடம் பார்த்தா சிங்ரே, மொலயா சர்க்கார் மற்றும் சுதிப்தா சின்ஹா ராய் ஆகியோர் பழங்காலப் பொருட்களில் நிபுணத்துவம் பெற்ற சிங்கப்பூர் நிறுவனத்தின் ஊழியர்களாக இருப்பதாக கூறி சுக்லாவிடம் அறிமுகமாகினர்.

இந்நிலையில் அந்த மூன்று பேர் சுக்லாவிடம், மனிதர்களை நிர்வாணமாகப் பார்த்து எதிர்காலத்தைக் கணிக்கக்கூடிய “மேஜிக் கண்ணாடி” தாங்கள் வேலை செய்யும் கம்பெனிக்கு வந்திருப்பதாகவும், அதன் விலை ரூ.2 கோடி என்றும், உங்களுக்கு வேண்டுமென்றால் ரூ.9லட்சத்துக்கு தருகிறோம் என்றும் கூறினார்.

இதை ஆரம்பத்தில் நம்பாமல் இருந்த சுக்லாவிடம், கண்ணாடியை வாங்கியதாகக் கூறப்படும் நபர்களிடமிருந்து போலியான சான்றுகளை காட்டி சுக்லாவை சமாதானப்படுத்தினர். மேலும் அமெரிக்காவில் உள்ள நாசா விஞ்ஞானிகள் இந்த கண்ணாடியைப் பயன்படுத்தியதாகவும், பார்த்தா சிங்ரே, மொலயா சர்க்கார் மற்றும் சுதிப்தா சின்ஹா ராய் ஆகியோர் தெரிவித்தனர்.

ஒருகட்டத்தில் கண்ணாடியை வாங்க ஒப்புக்கொண்டார் முதியவர் சுக்லா. ஆனால், அதை வாங்க பணத்துடன் புபனேஷ்வர் வர வேண்டும் என்று அந்த நபர்கள் தெரிவித்தனர். அதன்படி புபனேஷ்வர் வந்த பிறகு முதியவரிடம் ரூ.9 லட்சத்தை வாங்கிக்கொண்டு ஒரு கண்ணாடியைக் கொடுத்தனர். அந்தக் கண்ணாடியை வாங்கிய பிறகு தான், ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். கண்ணாடி போலியானது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் உண்மையில் மோசடி செய்பவர்கள் என்பதையும் அறிந்தார் முதியவர் சுக்லா.

இந்த சம்பவம் குறித்து முதியவர் சுக்லா போலீஸிடம் புகார் அளித்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்து குற்றவாளிகள் மூன்று பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள பார்த்தா சிங்ரே, மொலயா சர்க்கார் மற்றும் சுதிப்தா சின்ஹா ராய் ஆகியோரிடமிருந்து ஒரு கார், 28,000 ரூபாய் ரொக்கம், 5 மொபைல் போன்கள் மற்றும் சில போலி ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றினர். மேலும் இதே போல் எத்தனை பேரை ஏமாற்றி உள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Kathir

Next Post

நண்பனுடன் லிவிங் டு கெதர்..!! பெண்ணாக மாறிய ஆண்..!! கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்..!!

Fri Aug 18 , 2023
ஆந்திர மாநிலம் விஜயவாடா நகர் கிருஷ்ண லங்கா என்ற பகுதியில் வசித்து வந்தவர் தான் நாகேஸ்வரராவ். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறினர். ஒரே மாதிரி உடை அணிதல், ஒன்றாகவே சாப்பிடுவது, ஒன்றாகவே வெளியே செல்வது என இவர்களது நெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இந்த நெருக்கம் இருவரிடையே தன்பாலின ஈர்ப்பை ஏற்படுத்தியது. நாகேஸ்வர ராவும் அவரது நண்பர் […]

You May Like