பொதுத்துறை வங்கிகளில் முதன்மையான வங்கியான மகாராஷ்டிரா வங்கி பல்வேறு பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. டெபியுட்டி ஜென்ரல் மேனேஜர், உதவி ஜென்ரல் மேனேஜர், தலைமை மேனேஜர், சீனியர் மேனேஜர், மேனேஜர் உள்ளிட்ட பதவிகள் நிரப்பப்படுகிறது. நிரந்தர அடிப்படையில் மொத்தம் 349 மற்றும் தற்காலிக அடிப்படையில் 1 காலிப்பணியிடம் உள்ளன.
காலிப்பணியிட விவரங்கள்:
டெபியுட்டி ஜெனரல் மேனேஜர்
உதவி ஜெனரல் மேனேஜர்
தலைமை மேனேஜர்
சீனியர் மேனேஜர்
மேனேஜர்
வயது வரம்பு:
- டெபியூட்டி ஜென்ரல் மேனேஜர் பதவிக்கு அதிகபடியாக 50 வயது வரை இருக்கலாம்.
- உதவி ஜெனரல் மேனேஜர் பதவிக்கு 45 வயது வரை இருக்கலாம்.
- தலைமை மேனேஜர் பதவிக்கு 40 வயது வரை இருக்கலாம்.
- சீனியர் மேனேஜர் பதவிக்கு 25 முதல் 38 வரை இருக்கலாம்.
- மேனேஜர் பதவிக்கு 22 முதல் 35 வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி: துறை சார்ந்த பாடப்பிரிவுகளில் BE/ B.Tech, B.Sc/M.Sc, CA, CFA, CMA, MCA எதாவது ஒன்று முடித்திருக்க வேண்டும். பதவியை பொறுத்து அனுபவம் மாறுப்படும். குறைந்தபட்சம் 3 முதல் அதிகபடியாக 12 வருடங்கள் வரை அனுபவம் தேவை.
சம்பளம்:
டெபியூட்டி ஜெனரல் மேனேஜர் – ரூ. 1,40,500 முதல் ரூ.1,56,500 வரை
உதவி ஜெனரல் மேனேஜர் – ரூ. 1,20,940 முதல் ரூ.1,35,020 வரை
தலைமை மேனேஜர் – ரூ. 1,02,300 முதல் ரூ.1,20,940 வரை
சீனியர் மேனேஜர் – ரூ. 85,920 முதல் ரூ.1,05,280 வரை
மேனேஜர் – ரூ. 64,820 முதல் ரூ. 93,960 வரை
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பித்தவர்களில் இருந்து தகுதியானவர்கள் தெரிவுசெய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். விண்ணப்பங்கள் அதிகமாக இருந்தால், எழுத்துத் தேர்வு நடத்தப்படலாம். இறுதி தேர்வு நேர்காணலில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். நேர்காணலுக்கு வருபவர்கள், அனைத்து அசல் கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே அழைப்பாணை வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்பிக்கும் நபர்கள் https://bankofmaharashtra.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் 30.09.2025.