அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள லாங் தீவின் வெஸ்ட்பரி பகுதியில் அமைந்துள்ள நாஸாவ் ஓபன் எம்.ஆர்.ஐ மையத்தில், அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.
நியூயார்க்கின் லாங் தீவில் வசிக்கும் அட்ரியன் ஜோன்ஸ் என்பவர் முழங்கால் வலிக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், வெஸ்ட்பரி பகுதியில் அமைந்துள்ள நாஸாவ் ஓபன் எம்.ஆர்.ஐ மையத்தில் தன் முழங்காலை ஸ்கேன் செய்திருக்கிறார். அப்போது எழுந்திக்க, அவரின் 61 வயது கணவரை உதவிக்காக அழைத்திருக்கிறார்.
அப்போது அவர் கழுத்தியில் இரும்பு செயின் ஒன்றை அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது. அவர் எம்.ஆர்.ஐ ஸ்கேன் அறைக்கு வந்தவுடன் அவர் இயந்திரத்துக்குள் இழுக்கப்பட்டார். இதில் நிலைகுலைந்துப்போன அவரைக் காப்பாற்ற அறையில் இருந்த உதவியாளர்கள் முயன்றும் பலனளிக்கவில்லை பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக நியூயார்க் காவல்துறை தெரிவித்ததாவது: “எம்.ஆர்.ஐ (MRI) என்பது மிகுந்த காந்த சக்தி கொண்ட இயந்திரம். இதில் சிறிய உலோகப் பொருட்கள் கூட விபரீதம் ஏற்படுத்தும் ஆபத்துகளைத் தரக்கூடும். இப்படியான சூழலில் பாதிக்கப்பட்ட நபர் அனுமதி இன்றி எம்.ஆர்.ஐ அறைக்குள் நுழைந்துள்ளார். அவர் கழுத்தில் இருந்த பெரிய உலோகச் சங்கிலி இயந்திரத்தில் இழுத்ததால் உயிரிழந்திருக்கிறார்.” என்றார்.
தன் கணவரைப் பலி கொடுத்த ஜோன்ஸ்-மெக்காலிஸ்டர், “நாங்கள் இந்த மருத்துவமனைக்கு வருவது இது முதல்முறையல்ல. என் கணவர் அணிந்திருந்த செயினும் புதியதல்ல. ஊழியர்களுக்கு ஏற்கெனவே இது தெரியும். பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக இருந்திருந்தால், இந்த விபத்து நிகழ்ந்திருக்காது” என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
எச்சரிக்கை: எம்.ஆர்.ஐ ஸ்கேனர்கள் என்பது உடலின் உட்புற உறுப்புகளின் விரிவான மற்றும் துல்லியமான படங்களை எடுக்கும் ஒரு உயர்தர மருத்துவ கருவி ஆகும். இது வலுவான காந்தப்புலங்கள் மற்றும் ரேடியோ அலைகளை கொண்டு செயல்படுகிறது. இத்தகைய கருவிகள் பெரும்பாலான மருத்துவமனைகளிலும், நோயாளிகளின் ஆழமான உடல் நோய்களைக் கண்டறிய பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் இந்த ஸ்கேன் அறையில் மிகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம் வேண்டும். எம்.ஆர்.ஐ அறைக்குள் எந்தவிதமான உலோகப் பொருட்களும், செயின், நாணயம், கடிகாரம், போன்றவை கூட தடைசெய்யப்பட்டவை. அதனால்தான் மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் மிகவும் கவனமாக, பல கட்ட சோதனைகளின் பின்னரே நோயாளியை உள்ளே அனுப்புகிறார்கள்.
Read more: ஜெக்தீப் தன்கரின் ராஜினாமா ஏற்பு.. தன்கர் உடல் நலம் பெற பிரதமர் மோடி வாழ்த்து..