10 ஆண்டுகளுக்குப் பின் கொலைக்குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை….! தண்டனை சேலம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…..!

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள மூலங்காடு பள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் குமார் 43 அதே பகுதியில் சேர்ந்த பரமசிவம் (35) எந்த வருடம் இவருக்கு பொது குடிநீர் குழாயில் குழி தோண்டிக்கொண்டிருந்த போது தகராறு ஏற்பட்டிருக்கிறது. பரமசிவத்தை குமார் கடுமையாக தாக்கியுள்ளார்.


அப்போது அந்தப் பகுதியில் இருந்த பரமசிவத்தின் தாயார் சின்னம்மாள் குமாரை தடுக்க முயற்சித்தபோது அவரை அடித்து கீழே தள்ளியுள்ளார். இதன் காரணமாக சின்னம்மாள் பலத்த காயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த 2013 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி உயிரிழந்தார்.

இது குறித்து மேச்சேரி காவல்துறையினர் குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கொலை வழக்கில் குமாருக்கு 10 ஆண்டுகால சிறை தண்டனையும் 5000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தார். இதனை தொடர்ந்து, குமாரை காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் கோவை மத்திய சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

Next Post

இந்தியாவில் 3 பேரில் ஒருவர் பீர் குடிப்பது சிறுநீரக கற்களை குணப்படுத்தும் என்று நம்புகிறார்.. ஆனால் உண்மை என்ன..?

Sat Mar 11 , 2023
நம் உடலில் மிகவும் முக்கியமான உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரகத்தில் ஏதேனும் பிரச்சனை என்றால், அது மென்மேலும் அதிகரித்து உடலின் அடுத்தடுத்த உறுப்புகளையும் பாதிக்கக் கூடும்… சிறுநீரகப் பிரச்சனைகளில் முக்கியமானதாக இருப்பது சீறுநீரகத்தில் கல். சிறுநீரகங்களில் கல் உருவானால், சிறுநீர் ஓட்டத்தை தடுப்பதுடன், சிறுநீரகம் வீக்கத்தை ஏற்படுத்தும். சமீபகாலமாக சிறுநீரக கற்களின் பாதிப்பு அதிகரித்து வருகின்றன, மேலும் சிறுநீரக செயல்பாடு மற்றும் சிறுநீரக நோய்களுடன் தொடர்புடைய அபாயங்கள் பற்றிய போதிய […]

You May Like