“விரைவில் சந்திப்போம்” – சிறையில் இருந்து தொகுதி மக்களுக்கு கடிதம் எழுதிய மணீஷ் சிசோடியா

திகார் சிறையில் இருந்து தனது சட்டமன்ற தொகுதி மக்களுக்கு டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கடிதம் எழுதியுள்ளார்.

டெல்லியில் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசில் துணை முதல்வராக இருந்தவர் மணீஷ் சிசோடியா. மதுபானக் கொள்கை மூலம் ஊழலில் ஈடுபட்டதாக இவரை கடந்த பிப். 26 ஆம் தேதி சிபிஐ கைது செய்தது. இந்நிலையில், திகார் சிறையிலிருந்து மணீஷ் சிசோடியா தனது சட்டமன்றத் தொகுதியான பட்பர்கஞ்ச் மக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் கூறியதாவது, “மக்களை விரைவில் வெளியில் சந்திப்பேன். நாட்டின் சுதந்திரத்துக்காக மக்கள் போராடியது போன்று நல்ல கல்வி மற்றும் பள்ளிகளுக்கான போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். சிறையில் இருக்கும்போது எனது தொகுதி மக்கள் மீதான அன்பு அதிகரித்துள்ளது. அவர்கள் தான் எனது பலம்.

ஒவ்வொரு குழந்தையும் ஒரு நாள் நல்ல கல்வியைப் பெறுவார்கள். வளர்ந்த நாட்டுக்கு நல்ல கல்வி அவசியம். டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் கல்வி புரட்சி நடந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் என் மனைவியை மிகவும் நன்றாக கவனித்துக் கொண்டீர்கள். நீங்கள் அனைவரும் உங்களை கவனித்துக் கொள்ளுங்கள்” என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான வழக்கு நாளை டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில் இன்று தனது சட்டமன்ற தொகுதி மக்களுக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

Next Post

அன்டார்டிகாவை உலுக்கும் பென்குயின் மரணங்கள்!! இது தான் காரணமா?

Fri Apr 5 , 2024
சர்வதேச அளவில் தற்போது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ள எச்5என்1 பறவைக்காய்ச்சல், பறவையினங்களை கொன்று குவித்து வருகிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கடந்த மாதம் மட்டும் 532 பென்குயின்கள் இதனால் உயிரிழந்தது தெரியவந்தது. H5N1 இன்ஃப்ளூயன்ஸா பாதிப்புகள் கடந்த ஒரு சில ஆண்டுகளாகவே அன்டார்டிகாவில் அதிகரித்து இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதிக எண்ணிக்கையிலான பென்குயின் மரணங்களை அடுத்து அதன் பின்னணி குறித்து அறிய, அங்கிருந்து சேகரித்து […]

You May Like