திருமண உடையை கருப்பாக மாற்றிய சமந்தா.. காரணம் என்ன தெரியுமா? வெளியான வீடியோ

நடிகை சமந்தா, தனது திருமணத்தின்போது அணிந்திருந்த வெள்ளை நிற கவுனை, கருப்பு நிறத்தில் மாற்றியமைத்துள்ளார்.

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவரும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் ரசிகர்களை கவர்ந்த ஜோடியாக இருந்தனர். தெலுங்கு திரைப்படங்களில் இணைந்து நடித்த இருவரும் காதல் வயப்பட்டதால், கடந்த 2017-ம் ஆண்டு பிரம்மாணடமாக திருமணம் செய்து கொண்டனர்.

அதன் பின்னர், கடந்த 2021ம் ஆண்டு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், விவாகரத்து பெற்றனர். இந்நிலையில், திருமணத்தின்போது, தான் அணிந்திருந்த வெள்ளை நிற ஆடையை தற்போது, கருப்பு நிறத்திற்கு சமந்தா மாற்றியுள்ளார்.

திருமணத்தின்போது கவுன் வடிவில் இருந்த ஆடையை தற்போது வேறு விதமாகவும் மாற்றியுள்ளார். இந்த ஆடை மாற்றம் தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா பதிவிட்டுள்ளார்.

மேலும், தனது வாழ்க்கை முறையையும் பழக்க வழக்கங்களையும் மாற்ற மனப்பூர்வமாக தான் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் ஒன்றுதான் இது எனவும் சமந்தா குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு சிறிய மாற்றமும், தீர்க்கமான முடிவுகளும் முக்கியமானது எனவும் சமந்தா குறிப்பிட்டுள்ளார்.

‘மிஸ் யுனிவர்ஸ் பியூனஸ் அயர்ஸ்’ பட்டம் வென்ற 60 வயது அழகி!

shyamala

Next Post

'அரண்மனை 4' படப்பிடிப்பின்போது அந்தரத்தில் தொங்கவிட்டார்கள்...! வீடியோவை பகிர்ந்த தமன்னா..!

Sun Apr 28 , 2024
சுந்தர்.சி இயக்கத்தில் வெற்றிகரமாக மூன்று பாகங்கள் வெளியாகியுள்ள படம் அரண்மனை. ஹாரர் படம் என்றாலும் இந்தப் படங்களில் இருக்கும் நகைச்சுவையைப் ஃபேமிலி அடியன்ஸ் அதிகம் ரசித்துள்ளார்கள். தற்போது இந்த வரிசையில் உருவாகி வரும் படம் அரண்மனை 4. ராஷி கண்ணா, தமன்னா முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். விடிவி கணேஷ், யோகிபாபு எனப் பலரும் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் ஆதி இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் […]

You May Like