‘மிஸ் யுனிவர்ஸ் பியூனஸ் அயர்ஸ்’ பட்டம் வென்ற 60 வயது அழகி!

அர்ஜென்டினா நாட்டில் நடைபெற்ற அழகுப் போட்டியில் 60 வயது பெண் ஒருவர் கலந்து கொண்டு மிஸ் யூனிவர்ஸ் பட்டம் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

அர்ஜெண்டினா நாட்டில் 2024ம் ஆண்டுக்கான மிஸ் யூனிவர்ஸ் புயெனஸ் ஏரஸ் அழகுப் போட்டி நடைபெற்றது. இந்த அழகுப் போட்டியில் 60 வயது நிரம்பிய அலெஜன்ட்ரா மரிசா ரோட்ரிகியுஸ் அவர்கள் கலந்து கொண்டார். இவர் அர்ஜென்டினா நாட்டில் வழக்கறிஞராகவும் பத்திரிக்கையாளராகவும் பணியாற்றி வருகிறார்.

அர்ஜென்டினாவின் லா பிளாட்டாவைச் சேர்ந்த இவர், அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் நடைபெற்ற Miss Universe Buenos Aires 2024 போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.  அவரது இந்த வெற்றி உலகெங்கிலும் உள்ள பலரை ஊக்கப்படுத்தி உள்ளது.  ரோட்ரிகஸின் வெற்றி வரலாற்றில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. . 60 வயதில் மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்று மிஸ் யூனிவர்ஸ் பட்டம் பெற்ற முதல் பெண்மணி என்ற சாதனையை அலிஜன்ட்ரா மரிசா ரோட்ரிகுயிஸ் அவர்கள் படைத்துள்ளார்.

இந்த வெற்றி குறித்து, அலிஜன்ட்ரா மரிசா ரோட்ரிகுயிஸ் கூறியதாவது, “இது எனக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும். 60 வயதில் அழகிப் போட்டியில் கலந்து கொண்டு மிஸ் யூனிவர்ஸ் பட்டம் பெற்ற முதல் பெண்ணாக இருப்பது மகிழ்ச்சியை அளிக்கின்றது. அழகுக்கு வயது வரம்பு இல்லை. தடைகளை தாண்டி முன்னேற முடியும் என்பதை நான் எல்லா பெண்களுக்கும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்” என்று கூறினார்.

Next Post

மாதம் ரூ.63,000 சம்பளத்தில் தபால்துறையில் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Sat Apr 27 , 2024
தபால் துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. தபால் துறையில் தற்போது ஸ்டாப் கார் டிரைவர் (Staff Car Driver) பணிக்கு 27 காலியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் கர்நாடகாவில் பணியமர்த்தப்படுவார்கள். அதன்படி, பெங்களூரில் 15 பேர், மைசூரில் 3 பேர் , மற்றவர்கள் சிக்கோடு, கலபுரி, ஹாவேரி, கார்வார், மண்டியா, புத்தூர், சிவமொக்கா, உடுப்பி, கோலார் உள்ளிட்ட இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள். […]

You May Like