கோவிலில் திருடிய நபருக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி.. மீண்டும் ஓடிவந்து செய்த செயல்.!

மத்திய பிரதேச மாநிலத்தில் பாலகாட் பகுதியில் உள்ள நகரில் ஜெயின் என்ற கோயில் உள்ளது. இக்கோவிலில் விலைமதிக்க முடியாத பல பொருட்கள் திருடு போய் விட்டன.

இதனை தொடர்ந்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையிலும் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. சமீபத்தில் திருட்டு நடந்து 4 நாட்களுக்கு பின்னர் அந்த கோயிலுக்கு அருகில் ஒரு குழியில் ஒரு பை இருப்பதனை மக்கள் கண்டனர். அந்த பையில் கோயிலில் திருடுபோன அனைத்து பொருட்களும் இருந்தன. அதனை கண்டு அங்கு இருந்தோர் பெரும் ஆச்சரியம் அடைந்தனர்.

அத்துடன் அந்த பையில் ஒரு கடிதமும் இருந்தது. அதில் ” கோயிலில் திருடிய குற்றத்தை செய்த பிறகே நான் வாழ்வில் நிறைய கஷ்டப்பட்டேன். அதனால் இந்தப் பொருட்களை எல்லாம் திருப்பிக் கொடுக்கிறேன். மேலும் நான் திருடியதற்காக மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்” என்று எழுதப்பட்டு இருந்தது.

அங்கு வந்த போலீஸாரும் அந்த திருடனின் கடிதத்தைப் பார்த்தனர். அதனை தொடர்ந்து திருடப்பட்ட பொருட்களை சம்மந்தபட்ட கோயில் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர்.
திருடுபோன கோவிலின் பொருட்களை மீண்டும் கண்டதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும் கடவுள் நம்முடன் தான் இருக்கிறார் என்று மக்கள் கூறியுள்ளனர்.

Baskar

Next Post

'இனி ரேஷன் கார்டு தேவையில்லை'..!! மாநிலம் முழுவதும் புதிய நடைமுறை..!! அமைச்சர் சக்கரபாணி அதிரடி..!!

Fri Nov 4 , 2022
ரேஷன் கடைகளில் கருவிழியை ஸ்கேன் செய்து பொருள் வாங்கி செல்லும் திட்டம் விரைவில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கான மின்னணு பதிவேட்டில் கைரேகை […]

You May Like