MEd மாணவர் சேர்க்கை…! ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!

college admission 2025

எம்எட் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது


அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்எட் படிப்பில் நடப்பு கல்வியாண்டு (2025-26) மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. எம்எட் படிப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் www.tngasa.in என்ற இணைய தளத்தை பயன்படுத்தி இன்று மாலை வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக உயர்கல்வித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில்; அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்எட் படிப்பில் நடப்பு கல்வியாண்டு (2025-26) மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நடைபெற்று வருகிறது. எம்எட் படிப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் www.tngasa.in என்ற இணைய தளத்தை பயன்படுத்தி இன்று மாலை வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்ட பிறகு மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 25-ம் தேதி அன்று வெளியிடப்படும். இதைத் தொடர்ந்து, மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 26 முதல் 29-ம் தேதி வரை நடைபெறும். முதலாமாண்டு வகுப்பு செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

டி20 ஆசிய கோப்பை!. இந்திய அணியில் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்ட 10 வீரர்கள் யார் யார் தெரியுமா?

Wed Aug 20 , 2025
2025 ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் ஆகிய அணிகளுடன் இணைந்து இந்தியா குரூப் ஏ-வில் இடம் பெற்றுள்ளது. பிராந்தியப் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் அறிவித்துள்ளார். முதல் முறையாக டி20 போட்டியில் விளையாடும் வீரர்களின் பட்டியல் விவரங்களை அறிந்துகொள்ளுங்கள். ஆசிய கோப்பை ‘டி-20’ கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் (செப். 9-28) நடக்க உள்ளது. டி20 […]
Asia Cup squad first time 10 players 11zon

You May Like